தி.மு.க. கொண்டு வந்த இட ஒதுக்கீட்டில் படித்து ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர் அண்ணாமலை என்ற ரிதியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார். ஆனால், உண்மை வேறு விதமாக இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இதன்காரணமாக, தி.மு.க.வின் எம்.பி., எம்.எல்.ஏ.வில் தொடங்கி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வரை அண்ணாமலை விமர்சனம் செய்து வருகின்றனர். இதுதவிர, உண்மைக்கு புறம்பாக தொடர்ந்து அவதூறு செய்திகளையும் அவர்கள் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தான், தி.மு.க.வின் மூத்த தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு பேசியிருக்கிறார் ;
சில பேர் இட ஒதுக்கீட்டில், ஐ.பி.எஸ். எல்லாம் படித்து விட்டு, வேறு மாநிலங்களில் பணியாற்றி இங்கு வந்து இருக்காங்க. இன்று அவர்களோடு (பா.ஐ.க.) சேர்ந்து கொண்டு தம்மை யார்? அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்பது கூட தெரியாமல் பேசி வருகின்றனர் என கனிமொழி பேசியிருக்கிறார். அதாவது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். படிக்க தி.மு.க. தான் மிக முக்கிய காரணம் என்பது போல ஒரு மாய தோற்றத்தை தமிழக மக்கள் மீது திணிக்கும் முயற்சியை கனிமொழி மேற்கொண்டு இருக்கிறார் என்பது இதன்மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த 2010 – ல் நடந்த யூ.பி.எஸ்.சி. தேர்வில் 1180 மார்க் எடுத்து மெரிட்டில் ஐ.பி.எஸ். ஆக தேர்வானார். இட ஒதுக்கீட்டில் அல்ல என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.