உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ், சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹத்ராஸ் மத வழிபாட்டுக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு திமுக அமைச்சர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு மத சபையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர்.12 பேருக்கு கண்பார்வை பறிபோகியுள்ளது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை பற்றி வாய் கூட திறக்கவே இல்லை. இதனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் கூட எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
மற்ற மாநிலங்களில் சம்பவங்கள் நடந்தால் பெண்ணிய போராளியாக முதல் ஆளாக குரல் கொடுக்கிறார். ஆனால் தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்தால் கோமா நிலைக்கு போய் விடுகிறார் கனிமொழி. இவ்வாறு திமுக அமைச்சர் கனிமொழியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.