புதுக்கோட்டை … பெரம்பலூரை.. தொடர்ந்து கன்னியாகுமரியில் நிகழ்ந்த கொடூரம்!

புதுக்கோட்டை … பெரம்பலூரை.. தொடர்ந்து கன்னியாகுமரியில் நிகழ்ந்த கொடூரம்!

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே இருக்கும் அம்மன் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் சேதப்படுத்தி இருக்கும் சி.சி.டிவி காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு கடந்த 10 மாதங்களில் ஹிந்து கோவில்கள் இடிக்கும் காணொளிகள் மற்றும் சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த, சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த இழிவான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது என தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

அதனை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் உள்ள சாமி சிலைகள் உடைக்கப்பட்டது. இப்படியாக, ஹிந்து ஆலயங்கள் மீதும் ஹிந்துக்களின் உணர்வுகள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் விடியல் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, புகழ் பெற்ற இசக்கி அம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல, இன்று அக்கோவிலை பூசாரி திறந்துள்ளார். அப்பொழுது, உள்ள இருந்த சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த பூசாரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், இளைஞர் ஒருவர் கோவிலில் நுழைந்து அங்குள்ள சுவாமி சிலைகளை சேதப்படுத்தும் சி.சி.டிவி காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விடியல் ஆட்சியில் ஹிந்து ஆலயங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it