காரைக்குடி அருகே நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் திடீரென கருப்பசாமி வந்து இறங்கியதால், கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. மகளிர் அணியினர் அருள் வந்து ஆடினர். தி.மு.க. பகுத்தறிவு பல்லிளித்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் ஐந்து விளக்கு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தையொட்டி, பாட்டுக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பாட்டுக் கச்சேரியில் எங்கே இடி முழங்குது என்கிற கருப்புசாமி பாடல் இசைக்கப்பட்டது.
இதைக் கேட்ட தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் பலரும் அருள் வந்து எழுத்து சாமியாட்டம் ஆடினர். அப்போது, சில பெண்கள் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். இதையடுத்து, பாட்டை நிறுத்திவிட்டு மயக்கமான பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர் தி.மு.க.வினர். தி.மு.க.வினர் சாமி இல்லை என்றும், ஹிந்து கடவுள்களை இழித்தும் பழித்தும் பேசிவருவதோடு, பகுத்தறிவு பாடம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் மகளிர் அணியினர் சாமி வந்து ஆட்டம்போட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.