கர்நாடக மாநிலம் மாண்டியாவில், ஆபாசப் படங்களை காட்டி மிரட்டி, ஹிந்து மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இஸ்லாம் மதத்துக்கு மாற்ற வற்புறுத்தியதாக யூனுஸ் பாஷா என்பவனை, கர்நாடக மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ், போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலா நகரில் வசிப்பவன் யூனுஸ் பாஷா. 25 வயதான இவனுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. இந்த சூழலில், அதேபகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுடைய ஹிந்து சிறுமியுடன் நட்பாக பழகி இருக்கிறான். பின்னர், அச்சிறுமிக்கு ஒரு செல்போனும், சிம் கார்டும் வாங்கி, அதே பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவன் மூலம், கொடுத்து அனுப்பி இருக்கிறான். இதன் பிறகு, இருவரும் செல்போனில் பேசி வந்திருக்கிறார்கள். சிறிது நாளில், வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகள் மூலம் பேசும்படி அச்சிறுமியிடம் கூறியிருக்கிறான்.
இதையடுத்து, அச்சிறுமியும் வீடியோ காலில் பேசியிருக்கிறார். அப்போது, அச்சிறுமியின் அந்தரங்க பாகங்களை காட்டுமாறு வற்புறுத்தி இருக்கிறான். சிறுமியும் அவன் சொன்னதை எல்லாம் செய்திருக்கிறார். இந்த வீடியோக்கள் அனைத்தையும் பதிவு செய்து வைத்துக் கொண்டான். இந்த சூழலில், திடீரென ஒருநாள் அச்சிறுமியின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை காட்டி மிரட்டி, உடலுறவுக்கு அழைத்திருக்கிறான். ஆனால், அச்சிறுமி மறுத்து வந்திருக்கிறார். உடனே, மேற்கண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவாத மிரட்டி இருக்கிறான். இதனால், சிறுமி மிகுந்த அச்சம் மற்றும் அதிர்ச்சியில் இருந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 9-ம் தேதி அச்சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றிருக்கிறார்கள். இதனால், அச்சிறுமியை அவரது பாட்டி வீட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். இதையறிந்த யூனுஸ் பாஷா, இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நவம்பர் 10-ம் தேதி இரவு அச்சிறுமியின் பாட்டி வீட்டிற்குச் சென்றிருக்கிறான். கையோடு தூக்க மாத்திரைகளை வாங்கிச் சென்றவன், அந்த மாத்திரைகளை அச்சிறுமியிடம் கொடுத்து, பாட்டியின் சாப்பாட்டில் கலக்கும்படி கூறியிருக்கிறான். பின்னர், நவம்பர் 11-ம் தேதி மீண்டும் அச்சிறுமியின் பாட்டி வீட்டிற்குச் சென்ற யூனுஸ் பாஷா, அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதன் பிறகு, இஸ்லாம் மதத்திற்கு மாற்றினால் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறான்.
மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால், அச்சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறான். இந்த சூழலில், கடந்த நவம்பர் 13-ம் தேதி சிறுமியின் பெற்றோர் ஊரில் இருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். அப்போது, சிறுமி சாப்பிடாமல் கொள்ளாமல் மிகவும் மனச்சோர்வாகவும், மன அழுத்தத்துடனும் இருப்பதை கவனித்திருக்கிறார்கள். பின்னர், சிறுமியிடம் வற்புறுத்தி கேட்டபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தந்தை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கர்நாடக அரசின் புதிய மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் யூனுஸ் பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.