ஹிந்துக்களை இழிவுபடுத்திய முஸ்லீம் தலைவர்!

ஹிந்துக்களை இழிவுபடுத்திய முஸ்லீம் தலைவர்!

Share it if you like it

பஸ்ஸில் இலவச பயணம் என்றால் ஹிந்து ஆண்கள் கூட புர்கா போட்டுக் கொண்டு ஓசியில் செல்வார்கள் என்று கர்நாடக மாநில முஸ்லீம் தலைவர் ஒருவர் பேசி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் ஹிஜாப், புர்கா, பர்தா அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோர்ட்டிலும் வழக்குத் தொடர்ந்தனர். எனினும், கோர்ட்டும் கல்வி நிலையங்களில் மத அடையாளம் கூடாது என்று உத்தரவிட்டது. இதனால், ஹிஜாப் மட்டுமல்லாது காவி உள்ளிட்ட எந்த மத அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணியக் கூடாது என்று மாநில கல்வித்துறையும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, மாநில மக்களுக்கு பல்வேறு இலவசங்களை வழங்கிய காங்கிரஸ் கட்சி, இஸ்லாமியர்களின் ஆதரவை பெறுவதற்காக, மீண்டும் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கப்படும், பஜ்ரங்தள் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றது. இதற்கு முஸ்லீம்களில் 80 சதவிகிதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்ததுதான் காரணம் என்பது உறுதியானது.

இந்த சூழலில், கர்நாடக முஸ்லீம் அமைப்பு ஒன்றின் கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கிறது. இதில் பேசிய முஸ்லீம் அமைப்பின் தலைவர், ஹிந்துக்கள் இலவசத்திற்கு அடிமையாகிக் கிடப்பவர்கள். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்றால் ஹிந்து ஆண்கள் கூட புர்கா அணிந்து பஸ்ஸில் பயணிப்பார்கள். நிலைமை இப்படி இருக்க, நீங்க எங்க பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்றா சொல்கிறீர்கள் என்று கிண்டலாக பேசியிருக்கிறார். இதைக் கேட்டு கூட்டத்தில் இருந்து முஸ்லீம்கள் கைதட்டி சிரிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த பலரும் ரோஷமுள்ள ஹிந்துக்களே திருந்துங்கள் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.


Share it if you like it