EVM மீது பழிபோட்ட கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் கருத்து.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். அதெப்படி ஒவ்வொரு முறையும்,எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?
காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கருத்து.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம். கடந்த ஆண்டு 11 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலை கருத்தில் கொண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
ஓட்டு எண்ணும் இயந்திரம் நம்ப தகுந்தது ஆகும். இது எப்போதும் எனது பார்வையாகவே இருந்து வருகிறது. நான் அதற்கு ஆதரவாக நிற்கிறேன். அரசியல் கட்சிகள் மத்தியில், ஈ.வி.எம் இயந்திரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக முடிவுகள் அவர்களுக்கு ஆதரவாக இல்லாதபோது.
இதுவரை யாரும் தங்கள் கூற்றுக்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. எந்தவொரு தேர்தலின் முடிவும் எதுவாக இருந்தாலும். ஈ.வி.எம் மீது பழிபோடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. எனது அனுபவத்தில், ஈ.வி.எம் அமைப்பு வலுவான, துல்லியமான மற்றும் நம்பகமானதாகும்.
EVM மீது பழிபோட்ட நாடக குயின் ஜோதிமணிக்கு அன்றே தக்க பதிலடியை கார்த்தி சிதம்பரம் வழங்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/KartiPC/status/1326103666420449282