திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளரான கரு.பழனியப்பன் ஏ.டி.எம். மிஷினை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அள்ளி தெளித்து இருக்கிறார்.
எல்லாரும் டிஜிட்டல் இந்தியாவிற்கு மாறி விட்டீர்கள். அனைவரும் கூகுள் பே-வைதான் பயன்படுத்துகிறீர்கள். எல்லாரும், ஏ.டி.எம். பயன்படுத்துகிறீர்கள். ஏ.டி.எம். மிஷினில் தமிழ் இருக்கிறதா? என்று பாருங்கள். நீங்கள் பயன்படுத்தும் ஏ.டி.எம்-ல். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகள் இருக்க வேண்டும். அதனை, காண்பித்தால் மட்டும் அந்த வங்கியில் கணக்கு வைத்து கொள்ளுங்கள்.
ஆங்கிலம், ஹிந்தி மட்டும் இருந்தால் உங்கள் ஏ.டி.எம். கார்டை ஒப்படைத்து விட்டு எனக்கு தமிழ் பேசும் மிஷின் வேண்டும் என்று கேளுங்கள். ஏ.டி.எம். கார்ட் பயன்படுத்தும் இடத்தில் தயவு செய்து தமிழ் மொழியை மட்டும் பயன்படுத்துங்கள்.
வருட முடிவில், எத்தனை நபர்கள் தமிழ் மொழியை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பார்கள். தமிழை யாரும் பயன்படுத்தவில்லை என்றால், அந்த வருட மீட்டிங்கில் உ.பி.யை சேர்ந்த அதிகாரி தமிழ்நாட்டில் யாரும் தமிழ் மொழியை பயன்படுத்தவில்லை என்று முடிவு எடுத்து விடுவார் என்று அள்ளி விட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.