கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக திருவிழா ! பக்தியோடு சிறப்பாக கொண்டாடிய ஊர்மக்கள் ! ஏராளமானோர் பங்கேற்பு !

கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக திருவிழா ! பக்தியோடு சிறப்பாக கொண்டாடிய ஊர்மக்கள் ! ஏராளமானோர் பங்கேற்பு !

Share it if you like it

மதுரை மாவட்டத்தின் அமைந்துள்ள மேலூர் சொக்கம்பட்டி, நொண்டிக்கோயில்பட்டி, பழையசுக்காம்பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான கருப்பசாமி கோவிலின் கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல ஊர் மக்களும் கலந்துக்கொண்டு மிக உற்சாகமாக திருவிழாவை கொண்டாடிய நிகழ்வானது அப்பகுதியில் திருவிழா களைகட்டியது. கும்பாபிஷேக விழாவில் சாமிக்கு யாகம் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று பின்னர் பறையங்கருப்பசாமி சன்னதியில் ஆயுதத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் கோயில் பூசாரி கும்பத்திற்கு புனித நீர் எடுத்துச் சென்றார். அதன்பின் சுடுகாட்டுக் காளி என்று அழைக்கப்படும் காளியம்மன் சன்னதியில் பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பாக சிறப்பித்தனர்.


Share it if you like it