போடாத சாலைகளுக்கு பில்: உ.பி.க்களின் தில்லாலங்கடிகள்!

போடாத சாலைகளுக்கு பில்: உ.பி.க்களின் தில்லாலங்கடிகள்!

Share it if you like it

கரூர் மாவட்டத்தில் போடாத சாலைகளுக்கு பில் போட்டு பணத்தை எடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து, அம்மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே புகார் அளித்து வந்தார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதாவது, கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், அவற்றை மீண்டும் போட்டதாக கணக்குக் காட்டி பில் பாஸ் செய்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு சில இடங்களில் போடப்படும் சாலைகள் தரமற்றதாக இருக்கின்றன. மேற்படி ஒப்பந்தத்தை எடுத்திருப்பது தி.மு.க.வைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் என்பவரின் இன்ஃப்ரா என்கிற நிறுவனம். ஆகவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நடவடிக்கை இல்லை. கேட்டதற்கு தனக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கலெக்டர் கூறியதாகத் தெரிகிறது. எனவே, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் நெடுச்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரை சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவின் பேரில் துறை சார்ந்த அதிகாரிகள் கரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். ஈசந்தம், புகழூர், சேலம் பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளை ஆய்வு செய்ததில், சாலைகள் போடப்படாமலேயே பில் பாஸ் செய்து பணம் எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சங்கர் ஆனந்துக்கு 130 கோடி ரூபாய்க்கு டெண்டர் ஒதுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கரூர் நெடுஞ்சாலைகள் துறை கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, இளநிலை உதவியாளர் கண்ணன் மற்றும் பூபால் சிங் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதன் பிறகு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையாத நிலையில், முழு தொகையும் எடுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் நித்திலன், கரூர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் முகமது ரபீக், உதவி பொறியாளர்கள் தீபிகா, கார்த்திக், ஈரோடு நபார்டு கிராம சாலைகள் கோட்ட கணக்கர் சத்யா ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் இப்படியொரு தில்லாலங்கடி வேலைகளை தி.மு.க.வினர் அரங்கேற்றி இருப்பதைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகள் அரங்கேறி இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்திருக்கிறது. ஆகவே, தமிழகம் முழுவதும் புகார்கள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் தி.மு.க.வினரின் லீலைகளை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி வரும் நிலையில், தற்போது அ.தி.மு.க.வினரும் அதிரடியில் இறங்கி இருக்கிறார்கள். இதனால், உ.பி.ஸ்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.


Share it if you like it