கரூரில் தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உ.பி.ஸ்களை கதிகலங்க வைத்திருக்கின்றனர்.
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தின் சுற்றுச் சுவரில் பா.ஜ.க. சுவர் விளம்பரம் செய்திருந்தது. ஆனால், பா.ஜ.க. விளம்பரத்தை அழித்துவிட்டு அதன் மீது தி.மு.க.வினர் விளம்பரம் செய்ய முற்பட்டனர். இதனால் பா.ஜ.க. – தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், போலீஸார் உதவியுடன் அந்த சவரில் இருந்த பா.ஜ.க.வினரின் சுவர் விளம்பரத்தை அழித்து விட்டு தி.மு.க.வினர் விளம்பரம் எழுதினர். ஏனெனில், கோவை மற்றும் சென்னையில் டேரா போட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, எப்போதாவது ஒருமுறைதான் கரூருக்கு வருகிறார். அப்படி வரும்போது, வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் இருக்கும் பயணியர் மாளிகையில்தான் தங்குவாராம். ஆகவே, அந்த இடத்தில் தி.மு.க.வின் விளம்பரம் இருக்க வேண்டும் என்பது உ.பி.ஸ்கள் எண்ணம். இதற்காகவே, பா.ஜ.க.வினரின் விளம்பரத்தை அளித்து விட்டு, தங்களது விளம்பரத்தை எழுதி இருக்கிறார்கள்.
ஆகவே, இது தொடர்பாக கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அன்றையதினம் இரவே கரூரில் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருந்த பா.ஜ.க.வினரின் சுவர் விளம்பரங்களில் இருந்த பாரத பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை கருப்பு பெயின்ட் ஊற்றி அழித்தனர். மறுநாள் இதுகுறித்தும் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், 3 நாட்களுக்கு மேலாகியும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எந்தவித அனுமதியும் வாங்காமல் எழுத்தப்பட்டிருந்த தி.மு.க. விளம்பரத்தை கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் அழிக்கப் போவதாகதாகவும், காவல்துறையையும், தி.மு.க.வினரின் அராஜகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் பா.ஜ.க.வினர் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த பா.ஜ.க.வினர் தி.மு.க.வினரின் சுவர் விளம்பரத்தை அழித்தனர். அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த செந்தில்நாதன், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கு திரண்டிருந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், 3 நாட்களுக்குள் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
எனினும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க போலீஸார் மறுத்ததால் அனைவரும் கைதாவதாகக் கூறி போலீஸ் வாகனங்களில் ஏறிச் சென்றனர். பா.ஜ.க.வினரின் இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கரூர் வரலாற்றிலேயே பா.ஜ.க.வினர் நடத்திய இந்த போராட்டம்தான் மிகப்பெரிய அளவிலானது. இதுபோன்ற ஒரு புரட்சி தற்போதுதான் நிகழ்வதாகவும் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.