காஷ்மீரில் ஹிந்துக்களை கொன்றதை நேரில் பார்த்தேன்! காஷ்மீர் முஸ்லிம் வாக்குமூலம்

காஷ்மீரில் ஹிந்துக்களை கொன்றதை நேரில் பார்த்தேன்! காஷ்மீர் முஸ்லிம் வாக்குமூலம்

Share it if you like it

காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை இனப்படுகொலை செய்ததை கண்ணெதிரே பார்த்தேன் என்று காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் மெல்ல மெல்ல தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கியது. இதன் பின்னர், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தீவிரவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இன்னல்களுக்கு ஆளானார்கள். இது, அம்மாநில முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவின் காலகட்டமான 1987-ம் ஆண்டு முதல் 1990 வரை உச்சத்தில் இருந்தது. குறிப்பாக, 1990-ம் ஆண்டு இந்திய சிறையிலிருந்த 70 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை நடந்தது. ஒன்று மதம் மாற வேண்டும். அல்லது நாட்டை விட்டே வெளியேற வேண்டும். அதுவும் இல்லையா உயிரை விட வேண்டும் என்று சொல்லி ஹிந்து பண்டிட்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தனர் இஸ்லாமிய தீவிரவாதிகள்.

இதற்கு அம்மாநிலத்தில் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் உடந்தையாக இருந்தனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அக்கம்பக்கத்தில் வசித்த இஸ்லாமியர்களே ஹிந்து பண்டிட்களை காட்டிக் கொடுத்ததுதான். மேலும், மதம் மாற மறுத்த ஹிந்து பண்டிட் குடும்பங்களில் ஒருவரை கொலை செய்து, அவரது ரத்தத்தில் தோய்க்கப்பட்ட அரிசியை மற்றவர்களை சாப்பிட வைத்து சித்ரவதை செய்த கொடூரமும் அரங்கேறியிருக்கிறது. இப்படி, காஷ்மீரில் ஹிந்துக்களுக்கு நடந்த அநியாயத்தை இந்த உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்கிற படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. இப்படம் இந்திய மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சியினரும், தேச விரோதிகளும் இப்படம் ஒரு கட்டுக்கதை என்று பினாத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர், காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது உண்மை என்று கூறியிருக்கிறார். மேலும், இனப்படுகொலை செய்ததை தான் கண்ணெதிரே பார்த்ததாக கூறியிருக்கும் அவர், இதை செய்தது ஹிந்து பண்டிட்களின் வீட்டருகே இருந்தவர்கள்தான் என்றும் கூறியிருக்கிறார். அதோடு, இந்த இனப்படுகொலைக்கு தற்போதைய படித்த இஸ்லாமியர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். அப்படி மன்னிப்புக் கேட்பதற்கு திரைப்படம் தேவையில்லை. மனம் இருந்தால் போதும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இந்த செய்தியை தமிழகத்தில் இருக்கும் எந்த மீடியாக்களும் வெளியிடவில்லை. மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.


Share it if you like it