காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை!

காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை!

Share it if you like it

யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவராக இருப்பவர் முகம்மது யாசின் மாலிக். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் இவர் குற்றவாளி என என்ஐஏ நீதிமன்றம் அண்மையில் அதிரடியான தீர்ப்பினை வழங்கியது. இதையடுத்து, கடந்த மே 10 அன்று தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் யாசின் ஒப்புக்கொண்டான். பிரிவு 16 (பயங்கரவாதச் சட்டம்), 17 (பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்தல்), 20 (பயங்கரவாத கும்பல் அல்லது அமைப்பில் உறுப்பினராக இருப்பது) உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. இதற்கு, மறுப்பு எதுவும் தெரிவிக்காது தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு என்ஐஏ நீதிமன்றம் இன்று (25.5.2022) ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது

1990-ல் 4 விமான படை வீரர்களை கொன்றவன். பல ஹிந்து பண்டிட்களை கொன்றவன். பண்டிட் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்க காரணமானவன் மற்றும் லட்சக்கணக்கான பண்டிட்களை அகதிகளாக மாற்றியவன் என பல குற்றச்சாட்டுகள் இவன் மீது உள்ளது. யாசினுக்கு தூக்கு தண்டனை தான் சரியான தீர்வாக இருக்கும் என இவரால் பாதிக்கப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், யாசினுக்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இவர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it