கார்த்திகை மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து மலைக்கு செல்வது வழக்கம். இதனால் சபரிமலையயில் ஐயனை காண பல ஐயப்ப பக்தர்கள் திரண்டு தரிசித்து வருகின்றனர். ஆனால் ஐயப்ப பக்கதர்களுக்கு சபரிமலை செல்வதற்கு சரியான பேருந்து வசதிகள் இல்லாததால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் இருமுடியை தலையில் வைத்துக்கொண்டு சபரிமலைக்கு செல்வதற்காக கேரளாவில் பேருந்து ஒன்றில் முண்டியடித்து கொண்டு ஏறும் காணொளி ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில் சிலர் பேருந்தில் இடம் கிடைப்பதற்காக ஜன்னல் வழியாக ஏறுகிறார். இதற்கு கேரளா கம்யூனிச கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுக்காமல் ஹிந்துக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு மெத்தனமாக செயல்பட்டு வருகிறார். கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஐயப்ப பக்கதர்களுக்கு பேருந்துகள் வசதிக்கு ஏற்பாடு செய்யாமல் உள்ளதால் சமூக வலைத்தளங்ளில் பினராயி விஜயனை வறுத்தெடுத்து வருகின்றர். அந்த பதிவினை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பகிர்ந்து, கேரளாவில் இந்துவாக இருப்பதற்கு இதுதான் தண்டனை. அவமானம் ! என்று பதிவிட்டுள்ளார்.
https://x.com/VanathiBJP/status/1734773243368862020?s=20