தாலிபான்கள் பயன்படுத்தும் சின்னத்துடன் சபரிமலை கோவிலுக்கு வந்த காவல்துறை வாகனத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரியும் கோவிலாக இருப்பது சபரிமலை. உலக புகழ் பெற்ற தலமாக இன்று வரை இக்கோவில் விளங்கி வருகிறது. இது, கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹிந்துக்கள் மட்டுமில்லாது மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலை நாடி வருவதன் மூலம் இதன் பெருமையையும், சக்தியையும் நம்மால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
சபரிமலையின் புனித தன்மையை கெடுக்கும் விதமாக கேரள கம்யூனிஸ்ட் அரசு பல்வேறு சட்ட திட்டங்களை இக்கோவிலுக்கு எதிராக கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு, உலகம் முழுவதிலுமுள்ள ஐயப்ப பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதுதவிர, கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கேரள மக்கள் வெகுண்டெழுந்தை உலகமே அறியும். இப்படிபட்ட சூழலில், பத்தினம் திட்டாவில் உள்ள கொன்னி எனும் பகுதியில் கடந்த ஆண்டு சுமார் 90 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டு இருந்தன. இவ்விடம், சபரிமலை கோவிலுக்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய புலனாய்வு அமைப்புகளின் கருத்து படி, இப்பகுதி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் மிக முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஜெலட்டின் குச்சிகளை இதற்கு முன்பு இருந்த பயங்கரவாதி குழுவை சேர்ந்தவர்கள் விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதுதவிர, கேரள பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே கொன்னி தொகுதியில் போட்டியிட்டவர். இவரை, கொல்லவதற்கு கூட அடிப்படைவாதிகள் திட்டமிட்டு நடத்திய சதியாக இருக்கலாம் என அம்மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இப்படிபட்ட சூழலில், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், பம்பைக்கு வந்த போலீஸ் வாகனத்தில் சந்திரனும் நட்சத்திரமும் இருக்கும் சின்னம் இடம் பெற்று இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சின்னத்தினை, ஆப்கானிஸ்தானை சேர்ந்த தாலிபான் பயங்கவாதிகள் தங்களது வாகனத்தில் பயன்படுத்தி வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றன.
கருநாகப்பள்ளியை சேர்ந்த ஜெயக்குமார் நெடும்பிரேத் என்பவர் இதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இப்புகைப்படம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கேரள நியூஸ் 18 செய்தியாக வெளியிட்டுள்ளது. இதுதவிர, கேரள பா.ஜ.க மூத்த தலைவர் ஏ.ஜே. அனுப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது எண்ணத்தையும் பதிவிடுள்ளார்.