கேரளாவைச் சேர்ந்த க்ரீஷ்மா என்ற இளம்பெண், தனது காதலன் ஷாரோன் ராஜுக்கு கஷாயத்தில் விஷத்தை கலந்துகொடுத்து, கொலை செய்ததோடு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் கேரளா மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், லவ்ஜிகாத் காரணமாக ஹிந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
கேரளாவில் மதமாற்றம் என்பது உச்சத்தில் இருந்து வருகிறது. காரணம், முதலில் கேரளாவை இஸ்லாமிய மாநிலமாக்கிவிட்டு, பிறகு இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நோக்கமாக இருக்கிறது. இதனால், ஹிந்து மற்றும் கிறிஸ்தவ இளம்பெண்களை கடத்தி மத மாற்றம் செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அடிமைகளாக விற்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இப்படி இதுவரை 32,000 பெண்கள் மாயமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தி கேரளா ஸ்டோரி என்கிற பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், லவ்ஜிகாத்தால் ஹிந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதி ஆலமிப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களது ஒரே மகள் நந்தா வினோத். கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியிலுள்ள கல்லுரவியைச் சேர்ந்தவர் அப்துல் ஷுகைப். எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறான். நந்தாவும், அப்துல் ஷுகைப்பும் ஒரே அரசுப் பள்ளியில் படித்து வந்திருக்கிறார்கள். இதில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. காலப்போக்கில் லவ்ஜிகாத் அடிப்படையில், நந்தாவுக்கு காதல் வலைவீசி வீழ்த்தி இருக்கிறான் அப்துல் ஷுகைப். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். அப்போது, பல்வேறு சந்தர்ப்பங்களில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. இந்த சமயங்களில் அப்துல் ஷுகைப் அவற்றை போட்டை எடுத்து வைத்திருந்திருக்கிறான்.
இதனிடையே, அப்துல் ஷூகைப் மற்றொரு பெண்ணை லவ்ஜிகாத்தில் வீழ்த்தி இருக்கிறான். எனவே, நந்தாவிடமிருந்து விலக முயற்சித்திருக்கிறான். இதனால், நந்தாவிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறான். ஆனால் நந்தாவோ, காதலை முறித்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அப்துல் ஷுகைப்புக்கு அடிக்கடி போன் செய்து கெஞ்சி இருக்கிறார். எனவே, அப்துல் ஷுகைப் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துக் கொண்டதோடு, நந்தாவின் நம்பரையும் பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டான். இதையடுத்து, தனது உறவினர்கள் மூலம் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா. இதன் பிறகும், அப்துல் ஷுகைப் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. வழக்கம்போல நந்தா போன் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டு வைத்துவிட்டான். இந்த முறை தனது நண்பர்கள் மூலம் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா.
இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி வீடியோ காலில் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா. அதற்கு, தன்னை விட்டு விலகாவிட்டால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி இருக்கிறான் அப்துல் ஷுகைப். இதனால், அதிர்ச்சியடைந்த நந்தா, வீட்டின் மாடியிலுள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நந்தாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடைசியாக அப்துல் ஷுகைப்புடன் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டியதாக அப்துல் ஷுகைப்பை போலீஸார் கைது செய்தனர். தற்போது 15 காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் அப்துல் ஷுகைப். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மதமாற்றத்தை தடுக்க சட்டம் இயற்றாவிட்டால், இதுபோன்ற தற்கொலைகளையும், கொலைகளையும் தடுக்க முடியாது என்பதே உண்மை!