லூலூ மால் மிட் நைட் சேல்… கேரளாவில் கொரோனா விர்…ர்!

லூலூ மால் மிட் நைட் சேல்… கேரளாவில் கொரோனா விர்…ர்!

Share it if you like it

கேரளாவில் மிட் நைட் சேல் என்கிற பெயரில் லூலூ மால் நிர்வாகத்தினர் அடித்த கூத்தால், அம்மாநிலத்தில் ஒரே நாளில் 3310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவலம் ஏற்பட்டிருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் லூலூ இன்டர்நேஷனல் ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. இந்த சூழலில், கேரளாவை எப்போதும் தூங்காத நகரமாக மாற்றும் முயற்சி என்கிற பெயரில் இந்த மால் நிர்வாகம், திருவனந்தபுரத்திலுள்ள மாலை ஜூலை 6-ம் தேதி நள்ளிரவு 11:59 மணி முதல் ஜூலை 7-ம் தேதி அதிகாலை 5 மணிவரை பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்காக திறப்பதாக அறிவித்தது. இதற்காக மாலின் வளாகத்தில் பல வேடிக்கையான நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்து, நகரத்தின் முதல் நிகழ்ச்சியாகக் கருதப்படும் இந்த நிகழ்வின் அனுபவத்தைப் பெறுவதற்காக நள்ளிரவிலும் பெரும் கூட்டம் கூடியது. மாலின் பால்கனிகள் மற்றும் எஸ்கலேட்டர்களில் ஷாப்பிங் பேக்குகள் மற்றும் வண்டிகளுடன் பொதுமக்கள் ஆக்கிரமித்தனர்.

ஜூலை 7-ம் தேதி அதிகாலையில் ஒவ்வொருவரும் முண்டியத்துக் கொண்டு வெளியேற முற்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதை பலரும் தங்களது செல்போன் மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதில், பலரும் நள்ளிரவு ஷாப்பிங் புதிய அனுபவத்தை சிலாகித்து கருத்துகளை பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், பலரும் இது ஒரு சாபக்கேடு என்று விமர்சனம் செய்யவும் தவறவில்லை. குறிப்பாக, ஒருவர் இது கேரளாவின் கருப்பு தினம் என்று குறிப்பிட்டது தனது உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதுகுறித்து லூலூ குழுமத்தின் பிராந்திய இயக்குனர் ஜாய் ஷதானந்தன் கூறுகையில், “நள்ளிரவு ஷாப்பிங்கை ஊக்குவிப்பதே எங்கள் முக்கிய குறிக்கோள். இதனால், பொதுமக்கள் குறைந்த போக்குவரத்துடன் இரவு வாழ்க்கையை அனுபவிக்கவும், அவர்களின் அன்றாட தேவைகளை மிகவும் அமைதியான சூழலில் வாங்கவும் முடியும்” என்றார்.

அதேசமயம், இந்த மிட் நைட் சேலால் கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 3310 பேராக உயர்ந்திருக்கிறது. கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஷாப்பிங் செய்ததால், கொரோளா நோயாளிகளும் கூட்டத்தில் கலந்து விட்டது யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனைகளுக்கு சென்று சோதனை செய்தபோதுதான், கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தற்போது லபோதிபோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கெனவே 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தபோது கேரளாவில்தான் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இங்கிருந்துதான் தமிழகத்துக்கும் பரவியது. இந்த சூழலில், கேரளாவில் தற்போது கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், தமிழக மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

புதிய அனுபவம் கேட்குதோ!


Share it if you like it