பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சி தொண்டர்களால் அரசியல் சாணக்கியர்., என்று அழைக்கப்படும் அமித்ஷா அவர்கள். பத்திரிக்கையாளர்கள் எழுப்பும், கேள்விகளுக்கு எவ்வாறு, பதில் அளித்து உள்ளார் என்பதை இங்கே காண்போம்..
நிருபர்;
மம்தா பேனர்ஜி உங்கள் மகனுக்கு போன் செய்து மேற்கு வங்கத்தில் மாஸ்க் அணியாமல்.. உங்கள் தந்தை (அமித்ஷா) சுற்றி வருகிறார்.. அவர் உடல் நிலை குறித்து கவலைப்படுவதாக கூறியதாக நிருபர் அமித்ஷாவிடம் கூறியிருந்தார்..
அமித்ஷா;
நான் மாஸ்க் போடாதது கவலையா அல்லது அவரின் டாடி மேற்குவங்கம் வந்ததில் கவலையா என்று அமித்ஷா நிருபரையும் சேர்த்து அண்மையில் சிரிக்க வைத்தார்.
கடந்த ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி ஊடகத்திற்கு அமித்ஷா பேட்டியளிக்கும் பொழுது பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.
பத்திரிக்கையாளர்: முக்கியமான சட்டங்களை ஏன்? அவசர அவசரமாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்..!
அமித்ஷா: ஏற்கனவே 70 ஆண்டுகள் வீணாகி விட்டது, இனிமேல் காத்திருக்க முடியாது என்று அதிரடி பதில் அளித்து இருந்தார்.
கேரளாவில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது ஏசியன்நெட் ஊடகத்தின் நிருபர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஏசியாநெட் நியூஸ்: கேரள தங்கக் கடத்தலில், சிபிஐ (எம்) அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை NIA (விசாரணை கமிஷன்) மற்றும் ED (அமலாக்கத்துறை) ஏன் விசாரிக்கின்றன?
அமித் ஷா: இந்திய மாநிலங்களுக்குள் உள்ள வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும்? ஐ.நா. விசாரணை கமிஷனா?
அமித் ஷா: நீங்கள் என்ன மாதிரியான கேள்வி கேட்கிறீர்கள்..
சில மாதங்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது.
நிருபர் ; மத்திய அரசிற்கு எதிராக மேற்கு வங்கத்தில் டெல்லி விவசாயிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்தியது உங்களுக்கு பின்னடைவா ஏற்படுத்துமா?
அமித்ஷா; எவ்வளவு பேர் போராடினார்கள்?
நிருபர் ; 100-ல் இருந்து ஒரு 1000 ஆயிரம் பேர்
அமித்ஷா; இது எப்படி எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
நிருபர் ; அதிர்ச்சி
நிருபர் எழுப்பும் கேள்விகளுக்கு, எப்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. உடனுக்கு உடன் பதில் கொடுக்கிறாரோ, அதே போன்று தி.மு.க தலைவர் ஸ்டாலினும். இன்னும் ஒரு 380 கோடி ரூபாயை, பி.கே-விற்கு கொடுத்து நன்கு பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


சமீபத்தில் விழுப்புரம் பொது கூட்டத்தில் பேசும் பொழுது அமித்ஷா இவ்வாறு பேசியுள்ளார்.
2 ஜி என்றால் முரசொலி மாறன், தயாநிதி மாறன்.
3 ஜி என்றால் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி,
4 ஜி என்றால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி,