‘ஹிஜாப்’ அணிந்து முஸ்லீம் மாணவிகள் ஓணம் டான்ஸ்: ‘ஹராம்’ எனச் சொல்லி விரட்டியடித்த அடிப்படைவாதிகள்!

‘ஹிஜாப்’ அணிந்து முஸ்லீம் மாணவிகள் ஓணம் டான்ஸ்: ‘ஹராம்’ எனச் சொல்லி விரட்டியடித்த அடிப்படைவாதிகள்!

Share it if you like it

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடிய இஸ்லாமிய மாணவிகளை, ஹராம் எனக் கூறி அடிப்படைவாதிகள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் குறிப்பிடத்தக்கது ஓணம். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் வசிக்கும் மலையாள தேசத்து மக்கள் ஓணம் பண்டிகையை ஒரு மாதகாலத்திற்கு வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில், நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி, கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், முன்கூட்டியே பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

அதன்படி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வண்டூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் கடந்த 3-ம் தேதி கொண்டாடினர். இதற்காக, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு, சேலை அணிந்து வந்து நடனமாடி மகிழ்ந்தனர். அப்போது, அதே பள்ளியில் பயிலும் முஸ்லீம் மாணவிகளும் சேலை அணிந்து, தலையில் ஹிஜாப் எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்தபடி, தங்களது தோழிகளுடன் சேர்ந்து நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாது. இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் லைக் செய்திருந்தார். இதைக் கண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொதித்தனர்.

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள், பெண்கள் ஹிஜாப் அணிந்து நடனமாடியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஷரியா சட்டத்தின்படி, நடனமாடுவது ஹிஜாப்பின் நோக்கத்தை சிதைப்பதாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். அதேபோல, முஸ்லீம் மதகுரு ஒருவரும், ஹிஜாப் அணிந்து சிறுமிகள் நடனமாடியது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். இன்னொரு முஸ்லீம் மதகுருவான டாக்டர் கல்பே சிப்டைன் நூரி கூறுகையில், “600 சிறுமிகள் ஒன்று சேர்ந்து தங்களது விருப்பப்படி நடனமாடுகிறார்கள் என்பது, அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதேசமயம், இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பொறுத்தவரை, ஹிஜாப் மிகப்பெரிய மரியாதைக்குரியது. நாங்கள் ஷரியத்தை பின்பற்றினால், ஹிஜாப் அணிந்து மற்ற ஆண்கள் முன்பு நடனமாடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், மறுநாளான 4-ம் தேதி காசர்கோடு மாவட்டதிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார். இதில், முஸ்லீம் மாணவிகளும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இதையறிந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பள்ளியில் குவிந்தனர். நடனமாடிக் கொண்டிருந்த முஸ்லீம் மாணவிகளிடம், இது ஹராம், இஸ்லாத்துக்கு எதிரானது என்று சொல்லி, விரட்டி அடித்திருக்கிறார்கள். கேரளாவைப் பொறுத்தவரை, மாநிலத்தில் வசிக்கும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட இதர மதத்தினர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்துவதும், கொலை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பி.எஃப்.ஐ. நடத்திய பேரணியில், ஹிந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பகிரங்க கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், மாணவிகள் ஓணம் பண்டிகை கொண்டாடியதை தடுத்து விரட்டியடித்த இச்சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it