‘நீதிபதிகள் காவி உள்ளாடை அணிந்திருக்கிறார்கள்’ என்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி விழாக்களில் ஹிந்துக்கள் மீதும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும் கல்வீதியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டது பி.எஃப்.ஐ. அமைப்பினர்தான் என்பது உளவுத்துறை ரிப்போர்ட். மேலும், கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை படுகொலை செய்வதும் இந்த அமைப்பினர்தான். ஆகவே, பி.எஃப்.ஐ. மற்றும் இதன் கிளை அமைப்பான எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆகியவை பயங்கரவாத அமைப்புகள்தான். எதிர்காலத்தில் மேற்கண்ட அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் கூறினார்கள். தவிர, சூஃபி முஸ்லீம்களும் பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்பினருக்கு அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது. பயங்கரவாதிகள் கொடுக்கும் அறிவுரையின் பேரில், இந்திய முஸ்லீம்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி வருகிறார்கள். ஆகவே, மேற்கண்ட இரு அமைப்புகளையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலுயுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் மே 21-ம் தேதி நடந்த பி.எஃப்.ஐ. பேரணியில், ஒரு சிறுவனை வைத்து ஹிந்துக்களுக்கு எதிராக கோஷமிட வைத்தார்கள். அதாவது, சிறுவர்கள் மீது சட்டம் பாயாது என்கிற நம்பிக்கையில், “ஹிந்துக்கள் தங்களது இறுதிச் சடங்குகளுக்கு பூக்களையும், வாய்க்கு அரிசியும் தயாராக வைத்திருங்கள். கிறிஸ்தவர்கள் தங்களது இறுதிச் சடங்குகளுக்கு மெழுவர்த்தியையும், ஊதுபத்தியையும் தயாராக வைத்திருங்கள். உங்களுக்கு எமனாக நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் மண்ணில் கண்ணியமாக வாழ்ந்தால் வாழலாம். கண்ணியமாக வாழவில்லை என்றால் உங்களுக்கு சுதந்திரத்தை (மரணத்தை) கொடுக்க எங்களுக்குத் தெரியும்” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசவைத்தார்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பாக பி.எஃப்.ஐ. அமைப்பினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது கேரள உயர் நீதிமன்றம். மேலும், இது தொடர்பாக விஜய்குமார் என்கிற வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், பி.எஃப்.ஐ. ஆலப்புழா மாவட்டத் தலைவர் நவாஸ், மாவட்டச் செயலாளர் முஜீப் மற்றும் பலர் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோஷம் எழுப்பிய சிறுவனின் தந்தை உட்பட மொத்தம் 21 பேரை கைது செய்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினர் யாஹ்யா தங்கல் என்பவர், “நீதிபதிகள் காவி நிற உள்ளாடைகளை அணிந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் நிச்சயமாக வெப்பத்தை உணருவார்கள். அது உங்களை எரிக்கும், தொந்தரவு செய்யும் என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம்” என்று திமிராகப் பேசியிருக்கிறார். தற்போது இந்தக் காணொளிதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, பி.எஃப்.ஐ. அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.