கேரள அரசுக்கு சொந்தமான ஆயுர்வேத நிறுவனம் மாட்டு சாணம், கோமியம், பால், நெய், வெண்ணெய், ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டுகிறது..
மாட்டு சாணம், கோமியம், என்றால் தமிழகத்தில் உள்ள அறிவாலய ஊடகங்கள் முதல் சில்லறை வாங்கும் போராளிகள் வரை மிக கடுமையாக கிண்டல் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
2014 – ல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாடுகளை வணங்குவது குறித்து கிண்டல், கேலி பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
பசுவின் மூலம் கிடைக்கும் பொருட்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பேசினாலோ, எழுதினாலோ, அல்லது குரல் கொடுத்தாலோ அது குறித்து விமர்சனம் செய்து பசுவிற்கு ஆதரவாக பேசியவர்களின் உணர்வுகளை புண்படுத்தியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
ஆனால் இப்பொழுது ’கேரள அரசுக்குச் சொந்தமான ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனமான உஷாதி, மாட்டு சாணம், சிறுநீர், பால், நெய் மற்றும் தயிர் ஆகியவற்றால் ஆன‘ பஞ்சகவ்யா க்ருதம் ’விற்பனை செய்து வருகிறது.
மனநல நோய்கள், மஞ்சள் காமாலை, காய்ச்சல், கை-கால் வலிப்பு ஆகியவற்றிற்கு எதிராக இம்மருந்து சிறப்பாக செயல்படுவதாகவும். ஞாபக சக்தியை மேம்படுத்துவதாக ஓஷாதி கூறியுள்ளார்.
ஆயுர்வேத மருந்துகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்’ என்று ஓஷாதி வர்ணிக்கப்படுகிறார்.
ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் பசுவின் மூலம் கிடைக்கும் தயாரிப்புகள் குறித்து விளம்பரம் செய்கிறது. பசுவின் மூலம் கிடைக்கும் பொருட்களை குறித்து இன்று வரை கிண்டல் செய்யும் அருணன், சுந்தரவள்ளி, போன்ற தோழர்கள் இது குறித்து கேரள முதல்வரிடம் கேள்வி எழுப்புவார்களா என்று பலர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நன்றி ; Organiser Weekly
Kerala govt owned Ayurveda company making profit by selling Cow dung, Cow Urine products to 'boost memory and concentration'https://t.co/55rOtg5gVT pic.twitter.com/oFj0WO0s97
— Organiser Weekly (@eOrganiser) June 8, 2021