தூய்மையில் கேரளா முதலிடமாம்: காம்ரேடுகளின் களவாணித்தனம்!

தூய்மையில் கேரளா முதலிடமாம்: காம்ரேடுகளின் களவாணித்தனம்!

Share it if you like it

தூய்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபாரதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளாதான் என்றும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் நடப்பது என்ன? இதோ ஒரு விரிவான அலசல்…

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர், கடந்த 3-ம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அச்செய்தியில், “தூய்மைப் பணியில் கேரளாவின் தலையீட்டிற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்திருக்கிறது. தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளாதான். கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளைச் செய்திருக்கிறது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்துக்கு 2,080 கோடி ரூபாய், டெல்லிக்கு ரூ.900 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.2,900 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.3,000 கோடி, மேற்குவங்கத்துக்கு ரூ.3,500 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,800 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டி இருக்கிறது.

மேலும், “திட மற்றும் திரவக் கழிவுப் பிரச்னையைத் தீர்க்க, கேரளா எடுத்திருக்கும் முயற்சிகளையும், குப்பைக் குவியல்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பசுமைத் தீர்ப்பாயம் பாராட்டி இருக்கிறது. திரவக் கழிவுகளை நிர்வகிக்க கேரளா ரூ.2,343.18 கோடி மதிப்பிலான திட்டங்களை வடிவமைத்திருக்கிறது. இத்திட்டங்களின் மூலம் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படாவிட்டால், பிற வழிகளுக்கான இடைவெளி நிதியாக 84.628 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் அடிப்படையில்தான் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தவிர, கழிவு மேலாண்மை திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கேரளா ஏற்றுக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது. இதையடுத்து, கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கேரளாவின் தூய்மை மற்றும் கழிவு அரசியல் பற்றி பெருமை பேசி மார்தட்டி வருகின்றனர்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? கேரளா தனது குப்பைக் கிடங்காத தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தின் கழிவுகள் அனைத்தும் தமிழகத்தில்தான் கொட்டப்பட்டு வருகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதாவது, கேரளாவில் ஏராளமான மருத்துவக் கழிவுகள் சேர்கின்றனர். அதேபோல, மின்னனு, காய்கறி, இறைச்சிக் கழிவுகள் உட்பட இதர கழிவுகளும் கணிசமான அளவில் சேர்கின்றன. ஆனால், இந்த கழிவுகள் அனைத்தும் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறதா? அல்லது அழிக்கப்படுகிறதா? என்றால் அதுதான் இல்லை. கேரள கழிவுகள் அனைத்தும் அம்மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட எல்லைகளில் கொட்டப்படுகிறது. அதாவது, கேரளாவுக்கு காய்கறி முதல் அரிசி, பருப்பு, இறைச்சி வரையிலான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இவ்வாறு செல்லும் லாரிகளின் டிரைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, கேரள கழிவுகளை எல்லாம் ஏற்றி அனுப்பி விடுகின்றனர். இந்த லாரிகள் சோதனைச் சாவடிக்கு வரும்போது அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, தமிழகத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர். பின்னர், அக்கழிவுகளை கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட எல்லைகளில் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதேபோல, தேனி மாவட்ட எல்லையிலும் கேரள கழிவுகள் கொட்டப்படுகின்றன. ஆனால், இதை லோக்கலில் இருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை. காரணம், அவர்களுக்கும் கமிஷன் கரெக்ட்டாக கைமாறிவிடுவதுதான். இதனால், தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, தமிழக மக்களின் உயிருடனும் விளையாடுகிறது கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு.

ஆனால், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் இந்த களவாணித்தனத்தை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைத்துவிட்டு, ஏதோ கேரள அரசு கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுவதுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் தமிழகத்தில் இருக்கும் சீன கைக்கூலி காம்ரேடுகள். ஆகவே, தமிழக அரசு இனியும் அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புற சூழலை அழிக்கும் கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் வலியுறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.


Share it if you like it