தியேட்டரின் வெளியே ‘கே.ஜி.எஃப். 2’ படத்தின் போஸ்டரை ஒட்டி விட்டு, உள்ளே ‘பீஸ்ட்’ படத்தை ஓட்டுமாறு தியேட்டர் அதிபர்கள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இப்படம் அட்டர் பிளாப் என்பது அனைவரும் அறிந்ததே. வெளியான முதல் நாளிலேயே 3-வது காட்சியைப் பார்க்க ஆள் இல்லாமல் தியேட்டரே வெறிச்சோடிக் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், காவியை கிழிப்பதுபோல காட்சிகள் இருந்ததால் ஹிந்துக்களின் எதிர்ப்பைச் சந்தித்தார் விஜய். அதேபோல, படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி இருப்பதால் இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்ப்பையும் சந்தித்தார். இதனால், பீஸ்ட் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். எனினும், தடைகளைத் தாண்டி படம் திரைக்கு வந்து படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், நடிகர் யாஷ் நடித்திருக்கும் ‘கே.ஜி.எஃப். 2’ படம் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. இப்படம் வெளியானதுதான் தாமதம், திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கே.ஜி.எஃப் 2 படத்தை நோக்கி சாரைசாரையாக அணிவகுக்கத் தொடங்கி விட்டனர். இதனால், டோட்டலாக படுத்து விட்டது பீஸ்ட். மேலும், கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்த விஜய் ரசிகர்களே, பீஸ்ட் படத்தை கழுவிக் கழுவி ஊற்றத் தொடங்கி விட்டார்கள். இதனால், பீஸ்ட் படக்குழு வெறுத்துப் போய் விட்டது. ஆனாலும், இப்படத்தை தயாரித்திருப்பது ஆளும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா. ஆகவே, பீஸ்ட் படத்தின் தயாரிப்பு செலவாவது கிடைக்க வேண்டுமே என்பதற்காக தியேட்டர் அதிபர்களை மிரட்டத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது, கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியானதும், அப்படத்திற்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, பீஸ்ட் திரைப்படத்தை திரையிட்டிருந்த தியேட்டர் அதிபர்கள், அப்படத்தை மாற்றி விட்டு கே.ஜி.எஃப் 2 படத்தை திரையிட முடிவு செய்தார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தரப்போ, அக்ரிமென்ட்படி பீஸ்ட் திரைப்படத்தை குறைந்தபட்சம் ஒரு வார காலமாவது ஓட்ட வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறதாம். மேலும், ஆளும் தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதனால் தியேட்டர் அதிபர்கள் வேறு வழியின்றி நஷ்டத்துடன் பீஸ்ட் திரைப்படத்தையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், சில தியேட்டர் அதிபர்கள் பீஸ்ட் படத்தை மாற்றிவிட்டு கே.ஜி.எஃப். 2 படத்தை ஒளிபரப்ப முடிவு செய்து, கே.ஜி.எஃப். 2 படத்தின் போஸ்டர்களை தியேட்டர் வாயில் உள்பட பல்வேறு இடங்களில் ஒட்டி விட்டார்கள். இதைப் பார்த்து விட்டு பலரும் அத்தியேட்டரில் கே.ஜி.எஃப். படம்தான் ஓடுகிறது என்று நினைத்து டிக்கெட்டை வாங்கிவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்கள். அங்கு பீஸ்ட் படம் திரையிடப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள், தியேட்டர் உரிமையாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. வேடிக்கைதான் போங்க!