கிங்க்ஸ்லி பள்ளிச் சம்பவம் : குற்றவாளி தற்கொலை : சந்தேகத்தை தூண்டும் அண்ணாமலை !

கிங்க்ஸ்லி பள்ளிச் சம்பவம் : குற்றவாளி தற்கொலை : சந்தேகத்தை தூண்டும் அண்ணாமலை !

Share it if you like it

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கிங்க்ஸ்லி தனியார் பள்ளியில், போலியான ஆவணங்களை பயன்படுத்தி நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சிவராமன் அந்த பள்ளியில் என்சிசி பயிற்சியாளராக அந்த பள்ளியில் சேர்கிறார். இதனை தொடர்ந்து என்சிசி பயிற்சியாளர் சிவராமன் பள்ளியில் மூன்று நாள் என்சிசி முகாம் நடத்துவதாக கூறி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து தங்க வைத்த நிலையில், இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மாணவியை எழுப்பி தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சிவராமன்.

இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளி ஆசிரியையிடம் சொல்ல ஆசிரியை பள்ளி முதல்வருக்கு தகவல் சொல்ல பள்ளிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பயந்து இந்த கொடூரமான சம்பவத்தை மூடி மறைக்க பார்த்துள்ளனர். தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் சொன்ன பிறகுதான் இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட மேலும் 13 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பயிற்சியாளர் நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவை நியமனம் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே குற்றவாளியான நாதக நிர்வாகியும் என்சிசி பயிற்சியாளருமான சிவராமன் தற்கொலைக்கு முயற்சித்தை அடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (ஆக.23) காலை சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிவராமனின் தந்தையும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு மரணங்களுமே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை அவர்கள் எக்ஸ் பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *