ரிக்க்ஷா-வுக்கு பணம் கொடுக்க கூட வசதி இல்லாத நான் இன்று மத்திய அமைச்சர் இது பா.ஜ.க-வால் மட்டுமே சாத்தியம் – கிஷன் ரெட்டி உருக்கம்..!

ரிக்க்ஷா-வுக்கு பணம் கொடுக்க கூட வசதி இல்லாத நான் இன்று மத்திய அமைச்சர் இது பா.ஜ.க-வால் மட்டுமே சாத்தியம் – கிஷன் ரெட்டி உருக்கம்..!

Share it if you like it

ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை யாரும் மத்திய அமைச்சராக்கியதில்லை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக்கினார். எந்தக் கட்சியும் செய்யாததை பா.ஜ.க செய்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த என்னை மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.க.

மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அமைச்சராக்கி மோடி அழகு பார்த்திருக்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.

நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் (கண்ணீர் மல்கத் தெரிவித்தார்). ஆனால் என்னை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி-க்கள் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க முயன்ற பொழுது கங்ணம் கட்டித் தடை செய்தனர். சமூகநீதியைப் போற்றிக் காக்கும் காவலன் மோடி தான் என்று மத்திய அமைச்சர் முருகன் உருக்கமாக பேசி இருந்தார்.

வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது.

கட்சி கூட்டத்திற்கு சாதாரண தொண்டனாக திருப்பதிக்கு பஸ்ஸில் வந்துள்ளேன். சைக்கில் ரிக்க்ஷா-விற்கு பணம் கொடுக்க கூட வசதி இல்லாத நான் இன்று மத்திய அமைச்சராகி திருப்பதிக்கு வந்துள்ளதை குறித்து பெருமைப்படுகிறேன் இது பா.ஜ.க-வில் மட்டுமே சாத்தியம் என்று கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it