உ.பி. முதல்வர் யோகி கோயிலில் இஸ்லாமிய அடிப்படைவாதி தாக்குதல்..!

உ.பி. முதல்வர் யோகி கோயிலில் இஸ்லாமிய அடிப்படைவாதி தாக்குதல்..!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோயிலில் இஸ்லாமிய அடிப்படைவாதி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் அகமது முர்துசா. 29 வயதாகும் இவர், மும்பை ஐ.ஐ.டி.யில் ரசாயனப் பொறியியல் படித்தவர். படிப்பை முடித்தவர், மும்பையிலேயே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனிடையே, அகமது முர்துசாவுக்கும் கடந்தாண்டு வேலை பறிபோய் விட்டது. இதன் பிறகு, சொந்த ஊரான கோரக்பூருக்கே திரும்பி இருக்கிறார். இவரது தந்தை முனீர் அகமதுவும் மும்பையிலுள்ள சட்ட ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரும் கடந்தாண்டு ஓய்வு பெற்று குடும்பத்துடன் மீண்டும் கோரக்பூருக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த நிலையில்தான், நேற்று இரவு கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோயிலுக்கு வந்த அகமது முர்துசா, அல்லாகூ அக்பர் என்று கோஷமிட்டபடியே கோயிலுக்குள் நுழைய முற்பட்டிருக்கிறார். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அகமது முர்துசாவை தடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், தான் வைத்திருந்த அரிவாளால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பக்தர்களை சரிமாரியாக வெட்டி இருக்கிறார் அகமது முர்துசா. இதில், 2 ஜவான்கள் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், பாதுகாப்பு அதிகாரிகளும், பொதுமக்களும் சேர்ந்து அகமது முர்துசாவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதில், ஹைலைட் என்னவென்றால் இக்கோயிலின் தலைமை பீடாதிபதி வேறு யாருமல்ல, தற்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தான்.

இதுகுறித்து கோரக்பூர் மண்டல கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அகில் குமார் கூறுகையில், முர்துசா பற்றிய கூடுதல் விவரங்களை போலீஸார் சேகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அகமது முர்துசா பற்றி அவரது பெற்றோரிடம் விசாரித்ததில், ஏதோ வேலையாக சனிக்கிழமை வீட்டை விட்டுச் சென்றதாகவும், அதன்பிறகு திரும்பி வரவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தனர். தவிர, கோயில் வாசலில் இருந்து முர்துசாவின் பையை சோதனையிட்டதில், பென் டிரைவ், லேப்டாப் மற்றும் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து, முர்துசா குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க பென் டிரைவ் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அவரிடமிருந்து செல்போன், பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, முர்துசா சிறு வயதாக இருக்கும்போதே, பிற மதத்தினர் பற்றி அவரது மனதில் நஞ்சை விதைத்திருக்கிறார்கள் அவரது பெற்றோர். இதனால், அவர் பிற மதத்தினருடன் ஒட்டாமலேயே இருந்து வந்திருக்கிறார். மேலும், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக வந்த பிறகு, இவரது நடவடிக்கையில் ஏகப்பட்ட மாறுதல் இருந்து வந்திருக்கிறது. தவிர, குடும்ப வாழ்க்கையும் சரியில்லாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார். எல்லாவற்றும் மேலாக 2-வது முறையாக மீண்டும் யோகியே முதல்வராக வந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, யோகி தலைமை பீடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலுக்குள் ஏதோ சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே, பாதுகாப்புப் படையினர் மற்றும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.


Share it if you like it