லாவண்யா வழக்கில் சி.பி.ஐ. விசாரணையே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருப்பது தி.மு.க.வினர் முகத்தில் கரியை பூசியது போலாகி விட்டது என்பதுதான் ஹைலைட்!
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா. இவர், தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். 10-ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த இந்த மாணவியை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி இருக்கிறது. மாணவி மறுக்கவே, அவரது பெற்றோரை அழைத்து மாணவியின் மேல்படிப்பு செலவு, குடும்ப செலவு ஆகியவற்றை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு லாவண்யாவின் பெற்றோரும் மசியவில்லை. இதனால், கடந்த 2 ஆண்டுளாக மாணவி லாவண்யாவை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறது பள்ளி நிர்வாகம். குறிப்பாக, கடந்த பொங்கல் பண்டிக்கைக்குக் கூட மாணவியை வீட்டுக்கு அனுப்பாமல், விடுதியை சுத்தம் செய்வது, பள்ளி கழிவறையை சுத்தம் செய்வது, சமையல் பாத்திரங்களை கழுவுவது, தோட்ட வேலை என தொடர்ந்து வேலை கொடுத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். இதனால், பூச்சி மருந்து குடித்து லாவண்யா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் மாநில போலீஸாரின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த லாவண்யாவின் பெற்றோர், சி.பி.ஐ. விசாரணை கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. அரசோ, சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கில்தான், மாணவி லாவண்யாவின் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையே தொடரும். இதை தன்மானப் பிரச்னையாகக் கருதாமல், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தி.மு.க. அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும். தவிர, கட்டாய மதமாற்ற புகார் தொடர்பாகவும் சி.பி.ஐ.யின் விசாரணை தேவை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதான் தி.மு.க. அரசின் முகத்தில் கரியை பூசியது போலாகி விட்டது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.