ஹிந்துக்களை இழிவுப்படுத்திய ஆ.ராசாவின் கருத்து தி.மு.க. தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா? என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தி.மு.க.வின் மூத்த மற்றும் பிரபல ஆபாச பேச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் ஆ.ராசா. இவரது, கருத்துக்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தும் நோக்கிலேயே அமைந்து இருக்கும். கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இவரின் பின்னால் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆ.ராசா, நீ ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என பேசியிருந்தார். இச்சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
தி.மு.க. எம்.பி.யின். இழிவான இந்த கருத்திற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பொதுமக்கள் வரை தி.மு.க.விற்கு தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். இதனிடையே, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசினார்; ஆ.ராசா பேசியது நாட்டு மக்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது அவரது தலைவர் குடும்பத்துக்கும் பொருந்துமா? ஸ்டாலின் மருமகன் திருச்செந்தூர் சென்று யாகம் நடத்தினாரே அவருக்கும் இது பொருந்துமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.