மகாளய நாளில் நல்லிணக்கம்,செழிப்பு கலங்கரை விளக்கமாக இருக்கட்டும் !

மகாளய நாளில் நல்லிணக்கம்,செழிப்பு கலங்கரை விளக்கமாக இருக்கட்டும் !

Share it if you like it

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மஹாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி, இந்த மரியாதைக்குரிய மஹாளய நாளில், துர்காமாவை அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, ஞானம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்கிறோம். இந்த சிறப்பு சந்தர்ப்பம் தைரியம், நல்லிணக்கம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக இருக்கட்டும். இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it