நமது பாரத திருநாடு 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த நிலையில், நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற வீரர்கள் மற்றும் தலைவர்கள் அவர்களின் உதிரத்தை சிந்தி இன்னுயிரை விலையாக கொடுத்து விடுதலை பெற்று தந்துள்ளனர். நமது நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன நிலையில், 78 வது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடி வருகிறோம்.
மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பெற்றதில்லை நம்முடைய இந்த சுதந்திரம். அளவின்றி சிந்திய உதிரத்தாலும், எண்ணிறந்த உயிர்களின் தியாகத்தாலும் கிடைத்தது தான் நமது வீரச் சுதந்திரம். போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, சாதி, மத, மொழி, இன பேதம் களைந்து நாம் அனைவரும் பாரதியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் தேசபக்தியை வளர்த்துக் கொள்வோம்.
சுதந்திரத்திற்கான போராட்டங்களிலும் , தேச பிரிவின் போதும் உயிர் நீத்த அத்துணை வீரர்களுக்கும் வீரவணக்கம். அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பல தலைவர்களின் தியாகத்தால் கிடைத்த இந்த சுதந்திரத்தின் மகிமையை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இன்றைய தலைமுறையினரான நமக்கு உள்ளது.