அயோத்தி, வாரணாசி போல நமது திருவண்ணாமலையையும் மாற்றிக் காட்டுவோம் – அண்ணாமலை !

அயோத்தி, வாரணாசி போல நமது திருவண்ணாமலையையும் மாற்றிக் காட்டுவோம் – அண்ணாமலை !

Share it if you like it

மத்திய அரசின் உலகத் தரம் வாய்ந்த, மாணவர்களுக்கு, கல்வி, சீருடை, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளுக்கு திமுக அரசு அனுமதி கொடுத்தால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர தமிழக பாஜக
முயற்சிகள் எடுக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக X பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது :-

சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தற்போது கல்வித் தந்தையாகிவிட்டார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏழை, எளிய மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியைக் கொடுத்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள். மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வி அமைச்சர். அவருக்கு ஏழை மாணவர்களுக்கான கல்வித் தேவைகள் புரிய வாய்ப்பில்லை. இந்தியா முழுவதுமே மாநில அரசுகள், மத்திய அரசின் இலவசக் கல்வி வழங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கேட்கும்போது, தமிழக அரசு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை வேண்டாம் என்கிறது.

மத்திய அரசின் உலகத் தரம் வாய்ந்த, மாணவர்களுக்கு, கல்வி, சீருடை, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளுக்கு திமுக அரசு அனுமதி கொடுத்தால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர தமிழக பாஜக
முயற்சிகள் எடுக்கும். அமைச்சர் எ.வ.வேலு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்து நடத்தி வரும் பள்ளிகளின் கல்வித் தரத்துக்கும், நவோதயா பள்ளிகளின் கல்வித் தரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை பரிசோதித்து, எது குழந்தைகளுக்குத் தேவையானது என்று முடிவெடுக்கலாம். நவோதயா பள்ளிகளில் உலகத் தரத்திலான இலவசக் கல்வி பெறும் மாணவர்கள் இன்று உலக அளவிலான போட்டித் தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற கல்வி வழங்கும் திமுக அரசு, நீட் தேர்வை வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளில், ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 5. ஆனால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக நடத்திக் கொண்டிருக்கும் நாடகம்தான் தான் நீட் அரசியல். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் தமிழகத்துக்கு வழங்கியுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் 15. ஒரு புறம் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பதோடு, நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியை உறுதி செய்திருக்கிறார் நமது பிரதமர்.

திமுகவின் ஏடிஎம்மாக இருக்கிறார் அமைச்சர் வேலு. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பதற்கு உதாரணமாக, காவி வேட்டி கட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு. பிராமணர்கள் அல்லாதோர் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்று ஆறு மாதத்திற்கு முன்பு பேசிய திருமாவளவன், இப்போது, பிராமணர் அல்லாத பிரதமர் மோடி அவர்கள் எப்படி ராமர் கோவில் கருவறைக்குச் செல்லலாம் என்று மாற்றிப் பேசுகிறார்.

நமது நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் போல, உலகின் 19 நாடுகளின் உயரிய விருதுகள் நமது பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 விருதுகள், இஸ்லாமிய நாடுகளின் உயரிய விருதுகள். நமது பிரதமர் மோடி அவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தலைவன். 500 ஆண்டுகள் காத்திருப்பான, பல கோடி மக்களின் கனவும் எதிர்பார்ப்புமாக இருந்த ராமர் கோவில் இன்று நனவாகியிருக்கிறது. பிரதமரின் வாரணாசி தொகுதி, இன்று உலகின் ஆன்மீகத் தலைநகரமாக இருக்கிறது. அயோத்தியில் வரும் ஆண்டில் 25,000 கோடி வருவாய் ராமர் கோவில் மூலமாக கிடைக்கும். அயோத்திக்கோ, வாரணாசிக்கோ சற்றும் குறைந்ததல்ல நமது திருவண்ணாமலை. தமிழகத்தில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது, திருவண்ணாமலையையும், கோவில்கள் நிறைந்த ஆன்மீக பூமியான தமிழகத்தையும், ஆன்மீகத்தின் தலைநகராக மாற்றிக் காட்டுவோம். வாரணாசியைப் போல 1,000 கோடி நிதி ஒதுக்கி திருவண்ணாமலையை மாற்றிக் காட்டுவோம். திருவண்ணாமலையும் முன்னேற, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் நிச்சயம் வேண்டும்.


Share it if you like it