தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6-ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறந்து அன்றைய தினமே 2024 – 25-ம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.