காளையார் கோவிலை காப்பாற்றிய மருது சகோதரர்கள் போல் தமிழக கோவில்களை காப்பாற்றும் இந்து முன்னணி !

காளையார் கோவிலை காப்பாற்றிய மருது சகோதரர்கள் போல் தமிழக கோவில்களை காப்பாற்றும் இந்து முன்னணி !

Share it if you like it

தஞ்சை மாவட்டம் மீனாட்சி மருத்துவமனை அருகில் சுமார் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த முனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தினமும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக முனியாண்டவர் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி அரசு ஊழியர்கள் முற்பட்டனர். இதை அறிந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கோவிலை இடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி, எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு பிரச்சனை என்றால் களத்தில் முதல் ஆளாக இந்து முன்னணி வந்து நிற்கிறது. மேற்கண்ட சம்பவம் போல் பல கோவில்களை இந்து முன்னணி காப்பாற்றி உள்ளது. தற்போது மக்களை ஆளும் திமுக அரசே ஹிந்து தெய்வங்களுக்கு எதிராக நின்றாலும் தெய்வங்களை காப்பாற்றும் அரும்பணியில் ஈடுபட்டு வரும் இந்து முன்னணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *