Share it if you like it
பா.ஜ.க அரசு பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து பொய்க்கு மேல் பொய்களை பரப்பி வரும் பிரபல ஆபாச பேச்சாளரும், வி.சி.க தலைவருமான திருமாவளவன் என்பது அனைவரும் நன்கு அறிந்தது.
இந்நிலையில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜி. சூர்யா அவர்கள் பட்டியல் சமூக மக்களுக்கு பா.ஜ.க கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, உரிய மரியாதையை வழங்கி இருப்பதாக புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளார்.
2014 மற்றும் 2019 ஆண்டுகளில் அதிகபட்ச பட்டியலின மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய கட்சி பா.ஜ.க.
- சுதந்திரம் அடைந்ததில் இருந்து மத்திய அமைச்சரவையில் பட்டியலின எம்.பி-க்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது 2014 மற்றும் 2019-ல் அமையப்பட்ட பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் தான்.
- நாட்டின் ஜனாதிபதியாக பட்டியலினத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை அமர்த்தி அழகு பார்த்ததும் பா.ஜ.க தான்.
- தேசிய தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த பங்காரு லட்சுமணனை நியமித்து, பட்டியலின தேசிய தலைவரைக் கொண்டிருந்த ஒரே இந்திய தேசிய கட்சியும் பா.ஜ.க தான்.
- தமிழகத்தில் தற்பொழுது தலைவராக இருக்கும் முருகன் அவர்கள் உட்பட இரண்டு முறை தலைவர் பொறுப்பை பட்டியிலின தலைவர்களுக்கு வழங்கியதும் பா.ஜ.க தான்.
- பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பட்டியலின அரசியல் தலைவர்கள், துணை முதல்வர், முக்கிய அமைச்சர்கள், சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், என பெரிய பதவிகளில் தகுதியை அடிப்படையாக கொண்டு அமர வைக்கப்பட்டுள்ளனர்.
- சமீபத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க அரசோ பட்டியலின மக்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, முக்கிய இலாக்காக்களை ஒதுக்காமல் பெயரளவில் இலாக்கக்களை ஒதுக்கியுள்ளது.
- தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் பட்டியலின மக்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதநிதித்துவமும், முக்கிய இலாக்காக்களும் ஒதுக்கப்பட வேண்டும்.
- பா.ஜ.க-வை காண்பித்து நீண்ட நாட்கள் சமூக அநீதிக்கு பின்பு தாங்கள் ஒளிந்துக் கொள்ள முடியாது. மக்களுக்கு நிச்சயம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் பட்டியலின எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய பிரதிநிதிதுவத்தை வழங்க மறுத்த முதல்வர் #MKStalin ! மக்களுக்கு நிச்சயம் தி.மு.க, முதல்வர் பதில் சொல்லத்தான் வேண்டும்.
பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளை பார்த்து ‘சமூக நீதி’ பாடம் கற்றுக் கொள்க.
Full Post: https://t.co/45fzrsagEW pic.twitter.com/LbGv10u1my
— SG Suryah (@SuryahSG) July 5, 2021
Share it if you like it