கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கும் மக்கள்… பிரசாரத்தை புறக்கணித்த தி.மு.க. முன்னணி தலைகள்?!

கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கும் மக்கள்… பிரசாரத்தை புறக்கணித்த தி.மு.க. முன்னணி தலைகள்?!

Share it if you like it

செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பதால், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி போன்ற தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் யாரும் நேரடி பிரசாரத்தை புறக்கணத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களால் ஏராளமான வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. குறிப்பாக, நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதம்தோறும் 1,000 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பூரண மதுவிலக்கு போன்ற வாக்குறுதிகள் பெண்களை ரொம்பவே கவர்ந்தன. இதுதான் தி.மு.க.வின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றே சாெல்லலாம்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கண்ட எந்த வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. இது மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், தி.மு.க. அரசு மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. மேலும், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தன. இதனால், பெண்கள் கொதித்து எழுந்து விட்டனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை சாலையில் கொட்டி போராட்டம் செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறிப்போனது.

இந்த நிலையில்தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. எனவே, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்தனர். எனவே, பிரசாரத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலினிடம், கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்கத் தொடங்கினர். இதனால், முதல் இரண்டு நாட்கள் பிரசாரத்துக்கு வந்த உதயநிதி, அதன் பிறகு பிரசாரத்துக்கு வராமல் புறக்கணித்தார்.

உதயநிதிக்கு கிளம்பிய எதிர்ப்பைப் பார்த்த ஸ்டாலின், நேரடி பிரசாரத்தை தவிர்த்து விட்டார். காணொளி வாயிலாக மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார். இதேபோலதான், கனிமொழியும் நேரடி பிரசாரத்தை தவிர்த்து விட்டார். மேலும், தி.மு.க.விலுள்ள முன்னணித் தலைவர்கள் பலரும் நேரடி பிரசாரத்து வரவில்லை. இதையடுத்து, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it