தி.மு.க ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் தமிழக மக்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பின்பு லாக்கப் தொடர்பான மரணங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மக்களிடம் உண்மையை எடுத்துகூற வேண்டிய ஊடகங்கள், பத்திரிக்கைகள் தி.மு.க ஆட்சி என்பதால் வழக்கம் போல கப்சிப். அந்த வகையில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சேர்ந்த மாணவர் மணிகண்டன் (வயது 21 ) தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்பொழுது, வாகன பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த காவல்துறையினர் இவரது வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர் தனது பைக்கை சில மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், சினம் கொண்ட காவல்துறையினர் மாணவனை நடுரோட்டில் போட்டு அடித்து உதைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கேயும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மணிகண்டனின் பெற்றோரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு உங்கள் மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற மாணவன் மாலையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, சென்னனை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்தவர் (25) விக்னேஷ். இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 19.4.2022 அன்று காவல்துறையினர் விசாரணையின் பொழுது மரணம் அடைந்தார். தி.மு.க. ஆட்சி என்பதால் வி.சி.க தலைவர் வழக்கம் போல கள்ள மெளனம். பட்டியல் சமூகத்தின் தலைவராக தம்மை காட்டிக் கொள்ளும் திருமாவளவன் விக்னேஷ் மரணம் குறித்து கூறியதாவது; போலீஸ் விசாரணையில் மரணமடைந்த விக்னேஷ் விவகாரத்திற்கு நாங்கள் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும் என்ற விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறோம் பணிச்சுமையால் தான் போராட்டம் நடத்த முடியாமல் போனது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செங்குன்றத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், ராஜசேகர் தாயார் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரை வைப்பது போல் அமைந்து உள்ளது. இதுகுறித்தான, செய்தியினை பாலிமர் வெளியிட்டுள்ளது.
அதன் லிங்க் இதோ.
இதுவரை, தி.மு.க ஆட்சியில் 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்தவகையில், ராஜசேகர் மரணம் அமைந்துள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றச்சாட்டினை முன்வைத்து இருந்தார். அதனைமெய்ப்பிக்கும் வகையில், இது போன்ற லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.