பிரிட்டன் தூதரகம் ‘வெறிச்’: பதிலடி கொடுத்த இந்தியா!

பிரிட்டன் தூதரகம் ‘வெறிச்’: பதிலடி கொடுத்த இந்தியா!

Share it if you like it

லண்டனில் இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு அளிக்காமல் காலிஸ்தானிகள் அராஜகம் செய்யும் அளவுக்கு இடமளித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியிலுள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றிருக்கிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் அமைந்திருக்கிறது. இந்த சூழலில், பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்தது மாநில அரசு. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் கற்களை வீசி தாக்கியதோடு, தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியையும் இறக்கி அவமதிப்பு செய்தனர். ஆனால், இங்கிலாந்து அரசு காலிஸ்தானிகளை தடுக்கவோ, தூதரகத்துக்கு பாதுகாப்பு கொடுக்கவோ எவ்வித முயற்சியும், நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, டெல்லியிலுள்ள இங்கிலாந்து நாட்டுத் தூதரை அழைத்து, லண்டனில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அராஜகத்தில் ஈடுபட்ட காலிஸ்தானிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. ஆனாலும், இங்கிலாந்து அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதையடுத்து, டெல்லியிலுள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெற்று பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

அதாவது, இங்கிலாந்து நாட்டின் தூதரகம் டெல்லியில் அமைந்திருக்கிறது. இந்த தூதரகத்திற்கு முன்பு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதோடு, வெளிநபர்கள் அத்துமீறி நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில், பேரிகார்டுகளும் போடப்பட்டிருக்கும். அதேபோல, அந்நாட்டின் தூதரின் இல்லத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். லண்டன் சம்பவத்திற்குப் பிறகு, தூதரகம் மற்றும் தூதரின் இல்லத்தின் முன்பு போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அந்நாட்டு அரசு பாதுகாப்பு வழங்காததால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.


Share it if you like it