ஏங்க ! அப்போ வந்தது குட்டி புயலுங்க, இப்போ வந்தது கெட்டி புயலுங்க !

ஏங்க ! அப்போ வந்தது குட்டி புயலுங்க, இப்போ வந்தது கெட்டி புயலுங்க !

Share it if you like it

மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வந்தததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை. இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

2015 ல் சென்னை வெள்ளத்தால் சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறு சூழலுக்கு ஆளாகினர். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கின. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 10,000 டன் குப்பைகள் உருவானது. இவற்றை அகற்ற மற்ற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து 2000 துப்புரவு பணியாளர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது. கடந்த வட கிழக்குப் பருவ மழையின் போது தமிழகத்தில் மொத்தம் 470 பேர் பலியானதாக தமிழக அரசு அறிவித்தது.

2016 – வர்தா புயலின் பாதிப்பில் இருந்து முன்னெச்சரிக்கையாக 10,430 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 97 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 50 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 நடமாடும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 4000 மரங்கள் சாய்ந்துள்ளன. அவற்றில் 696 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மரங்களை அகற்றும் பணியில் 8400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 450 துப்புரவு பணியாளர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்துள்ளனர். நேற்று காலை முதல் மின் இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சேதம் அடைந்துள்ள மின்கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரி செய்ய 4000 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வர்தா புயலுக்கு இது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

2015 ல் வெள்ளத்தினால் 260 பேர் உயிரிழப்புகள், 18 லட்சம் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் 2016 ல் வர்தா புயலின் போது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தனை மக்கள் வெள்ளத்தின் பாதிப்பினால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். ஆனால் இதை சர்வ சாதாரணமாக சிற்றிடர் என்று என்றும் தற்போது வந்த வெள்ள பாதிப்பை பேரிடர் என்றும் சொல்வது வெட்கக்கேடானது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசனை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it