கொரோனா வைரஸ் பரவல் சீனாவின் திட்டமிட்ட சதி என்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணையை இரட்டிப்பாக்கும்படி, உளவு அமைப்புகளுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார். மேலும் விசாரணை அறிக்கையை, 90 நாட்களுக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டு. வைரஸ் பரவலுக்கான முழு காரணம் தெரிய ஒத்துழைக்கும் படி, நட்பு நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு நெருக்கடி தரவும் முடிவு செய்யப்பட்டது
சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனா பரவலுக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும், கொரோனா சம்பந்தமான அனைத்து தகவல்களையும், கொடுத்து சீனா தனது வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என கூறி இருந்தார் இந்நிலையில் அமேரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா, கொரோனா பரவலை தடுக்க தவறியதற்காக உலக நாடுகளுக்கு 750 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இப்படி அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என அனைத்தும் இனைந்து ஒருசேர பணியாற்றும் நிலையில், நம் நாட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் மலிவு அரசியல் செய்து வருகின்றன. இதுவரை எதிர்க்கட்சிகள் சீனாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதது நமது துரதிஷ்டம், அவை அமெரிக்கா போன்ற நாடுகளை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.