நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, சமீபத்தில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். அதாவது மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இச்சட்டத்தில் எந்த தவறும் இல்லை இது வரவேற்கத்தக்கது என்று கூறியிருக்கிறார். அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்கள் இப்போது தமிழக மாநிலத்துடைய முதல்வராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை உணர்ந்து தான் பேசுகிறாரா என்று புரியவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் வரவேற்கும் போது தமிழகத்தில் மட்டும் தான் இந்த திமுக நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து வருகின்றது, மாணவர்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக தான், நான் மாணவர்களிடம் நீட் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளேன். ஆனால் அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்னை கிண்டல் செய்தார் ஒரு பரிச்சை வைத்து இருவரும் எழுதலாம் என்று என்னிடம் சவால் விட்டார். இப்போது அந்த அமைச்சர் எங்கே போனார். இந்த இரு பிஞ்சு குழந்தைகள் தற்கொலைக்கு தமிழக அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.