மதரஸாவில் சிறுமிகளை கற்பழித்த இஸ்லாமிய மத போதகர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், இச்சம்பவத்தை தமிழக மீடியாக்கள் மூடி மறைத்து விட்டன என்பதுதான் வேதனை.
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் புன்ஹானாவில் அமைந்துள்ள ஒரு மதரஸாவில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருகிறது. இந்த மதரஸாவில் ஏராளமான சிறுமிகள் இஸ்லாமிய படிப்புக்காக வந்திருக்கிறார்கள். இங்கு மௌலவியாக (ஆசிரியர்) முகமது ஹசன் என்பவர் இருந்திருக்கிறார். இந்த மதரஸாவுக்கு மௌலவி ஹசனின் உறவினர்களான தையாப் மற்றும் வாரிஸ் ஆகியோர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார்கள். அப்படி வரும்போது, அங்கு படிக்கும் மைனர் சிறுமிகளுக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தும், நைசாக பேச்சுக் கொடுத்தும், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதை கண்டுகொள்ளாமல் இருக்க, மௌலவி ஹசனுக்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையை கொடுத்திருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தையாப் மற்றும் வாரிஸ் ஆகியோர், ஒரு கட்டத்தில் தங்களது நண்பர்களையும் அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், மைனர் சிறுமிகளிடம் தாங்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும்போது அவற்றை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர், மேற்படி வீடியோவை குறிப்பிட்ட சிறுமிகளின் பெற்றோருக்கு அனுப்பி, மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள். பணம் தர மறுத்தால் மேற்கண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி இருக்கிறார்கள். இதனால், தங்களது மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பலரும் பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.
இதேபோல, ஒரு குறிப்பிட்ட சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோவை, அச்சிறுமியின் பெற்றோருக்கு அனுப்பி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். ஆனால், அச்சிறுமியின் பெற்றோரால் வெறும் 6 லட்சம் ரூபாய் மட்டுமே புரட்ட முடிந்திருக்கிறது. எனவே, அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டனர். இந்த வீடியோ அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் பகிரப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் பெற்றோர், கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார்கள். பின்னர், இதுகுறித்து குருகிராம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து, மேற்படி மதரஸாவின் மௌலவி முகமது ஹசன், அவரது உறவினர்கள் தையாப், வாரிஸ் மற்றும் இவர்களது நண்பர்கள் ஜியாவுல்ஹக், ஃபக்ருதீன், முஸ்தக், யூனுஸ், முஸ்தபா ஆகியோரை கைது செய்த குருகிராம் போலீஸார், அனைவர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததாகவே தமிழக மீடியாக்கள் காட்டிக் கொள்ளவில்லை.
காரணம், தமிழக மீடியாக்களைப் பொறுத்தவரை, ஒரு சார்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது, வெளி மாநிலங்களில் ஹிந்துக்களால் மைனாரிட்டி மதத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவற்றை ஊதி பெரிதாக்கி ஆதாயம் தேடிக்கொள்வது. அதேசமயம், மைனாரிட்டிகளால் ஹிந்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை அப்படியே மூடி மறைத்து ஆதாயம் அடைவது. அதேபோல, தி.மு.க. அண்கோ கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், இதர கட்சிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவது என்பதை கொள்கையாகவே வைத்து செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தத்தில், ஆதாயம் ஒன்று மட்டுமே அவர்களது குறிக்கோள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.