ம.பி.யிலும் ‘லவ் ஜிகாத்’: வீட்டை இடித்த மாநில அரசு!

ம.பி.யிலும் ‘லவ் ஜிகாத்’: வீட்டை இடித்த மாநில அரசு!

Share it if you like it

மத்தியப் பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்கிற பெயரில் ஹிந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மாநில அரசு அந்த முஸ்லீம் இளைஞரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தப்ராவில் வசித்து வருபவர் இந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். இருவரும் 2021 ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, இம்ரான் தனது பெயர் ராஜு ஜாதவ் என்று கூறியிருக்கிறான். பின்னர், இருவரும் நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்திராவை காதலிப்பதாகக் கூறியிருக்கிறான் இம்ரான். இதன் பிறகு, இருவரும் காதலர்களாக மாறியதோடு, அடிக்கடி டேட்டிங் போயிருக்கிறார்கள். விளைவு, இந்திரா கர்ப்பமானார். இதை இம்ரானிடம் கூறி, உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு இம்ரானோ. தற்போது கருவை கலைத்து விடலாம் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறான்.

இதை நம்பி 2021 செப்டம்பர் மாதம் இந்திராவும் கருவை கலைத்திருக்கிறார். பின்னர், இருவரும் அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகுதான், தனது கணவர் ஹிந்து அல்ல, அவரது பெயரும் ராஜு ஜாதவ் அல்ல. முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர். உண்மையான பெயர் இம்ரான் என்பது தெரியவந்தது. இதன் பிறகு, இஸ்லாமிய மௌலானா ஒருவர் வந்து, ஹிந்து கோயிலில் செய்த திருமணம் செல்லாது. ஆகவே, முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதோடு, இந்திராவும் முஸ்லீம் மதத்துக்கு மாற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு இந்திரா மறுத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த இம்ரான் குடும்பத்தினர் இந்திராவை தாக்கி ஒரு அறையில் வைத்து பூட்டியிருக்கிறார்கள்.

இதன் பிறகு, அந்த மௌலானா ஒசாமா கான் மற்றும் இம்ரானின் சகோதரர்கள் அமான், புன்னி ஆகியோர் இந்திராவை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மேலும், இம்ரானின் தாய் சுகா பேகம், இந்திராவை விபசாரத்துக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும், வீட்டுக்குள் ஒரு அறையில் அடைத்து வைத்து பல இளைஞர்களை அனுப்பி இந்திராவை விபசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். இப்படியாக 7 மாதங்கள் சித்ரவதையை அனுபவித்து வந்திருக்கிறார் இந்திரா. இந்த சூழலில், ஏப்ரல் 20-ம் தேதி இந்திராவை அடைத்து வைத்திருந்த அறையை பூட்ட மறந்து விட்டாள் சுகா பேகம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்து தப்பி தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார் இந்திரா.

பின்னர் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அங்குள்ள மகளிர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இம்ரான், அவனது தாய் சுகா பேகம் ஆகியோரை கைது செய்தனர். ஆனால், இம்ரானின் சகோதரர்கள் அமான், புன்னி மற்றும் மௌலானா ஒசாமா கான் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள். அவர்கள் 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே, இம்ரான் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், இம்ரானின் வீட்டை இடிக்க உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, இம்ரானின் வீட்டை நகராட்சி நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் லவ் ஜிகாத் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் ஜாதிவாரியாக பெண்களுக்கு விலை நிர்ணயம் செய்து முஸ்லீம் இளைஞர்களை லவ் ஜிகாத்தில் ஈடுபட வைப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேல் ஜாதியைச் சேர்ந்த ஹிந்து பெண்களுக்கு 5 லட்சம் ரூபாயும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 3 லட்சம் ரூபாயும், பட்டியலின ஹிந்து பெண்களுக்கு 1 லட்சம் ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த விலைப் பட்டியல் சமூக வலைத்தளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, லவ் ஜிகாத் விவகாரத்தில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.


Share it if you like it