டெல்லியில் ஹிந்து இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், ஹிந்து இளைஞர் ஒருவர் 80 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, யூனுஸ் அன்சாரி என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மௌகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அமைந்திருக்கும் சுய்யா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் கிரி. 21 வயதான இவர், வனத்துறையில் மரக்கன்றுகள் நடும் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். இவருடன் துத்தாமுனியா பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் யூனுஸ் அன்சாரியும் பார்ட்னராக இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி வேலை விஷயமாக வெளியில் செல்வதாகக் கூறிச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, விகாஸ் கிரியின் தந்தை, தனது மகனை காணவில்லை என்று மௌகஞ்ச் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். எனினும், விகாஸ் கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் துத்தாமுனியா வனப்பகுதிக்கு ஆடு, மாடுகள் மேய்க்கச் சென்றவர்கள், எலும்புக் கூடுகள் கிடப்பதை பார்த்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் நடத்திய விசாரணையில், அருகில் விகாஸ் கிரியின் ஆதார் கார்டு ஒன்று கிடந்திருக்கிறது. இதன் பிறகே, விகாஸ் கிரி கொலை செய்யப்பட்டிருக்கும் விவரம் போலீஸாருக்குத் தெரியவந்தது. அதேசமயம், அவரை யார் கொலை செய்தது, எதற்காக கொலை செய்தார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் விகாஸ் கிரியின் பார்ட்னர் யூனுஸ் அன்சாரியிடம் விசார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்தார். ஆகவே, விகாஸின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் போலீஸார் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான், யூனுஸ் அன்சாரியின் சகோதரி ஒருவருடன் விகாஸ் கிரி அடிக்கடி ஊர் சுற்றி வந்த தகவலை கிராம மக்கள் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, கடந்த 14-ம் தேதி யூனுஸ் அன்சாரியை பிடித்த போலீஸார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, யூனுஸ் அன்சாரிக்கு 3 சகோதரிகள். இவர்களில் ஒருவர் விகாஸ் கிரி மீது காதல் கொண்டிருக்கிறார். இருவரும் அடிக்கடி துத்தாமுனியா காட்டுப் பகுதிக்குச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது அரசல்புரசலாக யூனுஸ் அன்சாரிக்கு தெரியவந்திருக்கிறது. இந்த சூழலில், கடந்தாண்டு அக்டோபர் 3-ம் தேதி, தனது சகோதரியுன் கிரி இருப்பதை யூனுஸ் அன்சாரி பார்த்து, கையும் களவுமாகப் பிடித்து விட்டார்.
இதையடுத்து, தனது மைத்துனர் சிர்தாஜ் முகமதுவுடன் சேர்ந்து விகாஸ் கிரியை இரும்பு ராடால் தாக்கி இருக்கிறார்கள். இதில், விகாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின்னர், விகாஸ் கிரியை 80 துண்டுகளாக வெட்டி, கோணிப்பையில் போட்டு தூக்கிச் சென்று துத்தாமுனியா காட்டுப் பகுதியில் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் இதை யூனுஸ் அன்சாரி ஒப்புக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து யூனுஸ் அன்சாரியை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சிர்தாஜ் முகமதுவை தேடி வருகின்றனர். சமீபத்தில்தான், டெல்லியில் ஷ்ரத்தா என்கிற இளம்பெண் தனது காதலனான ஆப்தாப் என்பவனால் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது வனத்துறை கான்ட்ராக்டர் ஒருவர் 80 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.