ஹிந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் தொடர் அட்டூழியங்களால், நாடு முழுவதும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது லவ் ஜிகாத் என்கிற ஹேஷ்டேக்.
பாரத நாட்டில் ஜிகாதி போராளிகளால் ஹிந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி யோகலட்சுமி. இவர், இஸ்லாமிய வாலிபர் ஒருவரால் காதல் வசப்படுத்தப்பட்டார். பின்னர், அச்சிறுமி அந்த வாலிபரால் கடத்திச் செல்லப்பட்டு, போதை ஊசி செலுத்தி, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை, ஆட்டோவில் ஏற்றி வந்து, அவரது தாய் வீட்டில் வீசி விட்டுச் சென்றது அக்கும்பல். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதேபோல, கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிந்து பிராமணப் பெண் அபூர்வா பூர்ணிக். எம்.பி.ஏ. பட்டதாரிப் பெண்ணான இவரை, காதல் வலையில் வீழ்த்தினார் ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகளுக்குத் தந்தையான முகமது இசாஜ். திருமணத்துக்குப் பிறகு, அபூர்வாவின் பெயரை அர்ஃபா பானு என்று மாற்றியவர், ஹிஜாப், பர்தா, புர்கா ஆகிய ஆடைகளை உடுத்தி, இஸ்லாமிய மரபுகளை கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். மேலும், பிராமணப் பெண்ணான அவரை, இறைச்சிகளை சாப்பிடும்படியும் சித்ரவதை செய்திருக்கிறார். இதனால், மனமுடைந்த அபூர்வா, அவரை விட்டு பிரிய முடிவெடுத்து, டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினார். ஆத்திரமடைந்த அவர், அபூர்வாவை இரக்கமே இல்லாமல் 23 இடங்களில் கத்தியால் குத்தினார். இச்சம்பவமும் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்படி பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநிலத்திலும் ஒருசம்பவம் அரங்கேறி இருக்கிறது. நரசிங்பூர் மாவட்டம் கரேலி பகுதியைச் சேர்ந்த ஒரு ஹிந்து பெண்ணை, முகமது ஃபரூக் என்கிற இஸ்லாமிய வாலிபர் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். திருமணத்துக்கு முன்பு மதம் மாற மாட்டேன் என்று சொன்ன ஹிந்து பெண்ணை, திருமணத்துக்குப் பிறகு, மதம் மாறும்படி ஃபரூக்கும், அவரது பெற்றோரும் வற்புறுத்தி இருக்கிறார்கள். மேலும், இஸ்லாமிய மரபுகளை பின்பற்றும்படி கூறி, அடித்து உதைத்திருக்கிறார்கள். குறிப்பாக, நவராத்திரியன்று விரதம் இருக்க முற்பட்ட பெண்ணை, இறைச்சியை சாப்பிட வைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.. தனது 2 பெண் குழந்தைகளுக்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டதாக அப்பெண் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், இந்தியாவில் முத்தலாக் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 24-ம் தேதி அந்த ஹிந்து பெண்ணை முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் ஃபரூக். இதையடுத்து, வெகுண்டெழுந்த அப்பெண், தனது நேர்ந்த கொடுமைகளை எல்லாம் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்துதான், லவ் ஜிகாத் என்கிற ஹேஷ்டேக் நாடு முழுவதும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.