நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூ டியூப்பர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்து இருக்கிறது.
தி.மு.க. எம்.பி. கனிமொழியின் தீவிர அதரவாளர் என்று கூறப்படுபவர் சவுக்கு சங்கர். இவர், உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் குடும்பத்தை மிகவும் தரம் தாழ்ந்து வகையில் விமர்சனம் செய்ய கூடியவர். அந்த வகையில், கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனக்கு தெரியாதா? என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதுதவிர, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் அருவருக்கதக்க வகையில், விமர்சனம் செய்து வந்தார். அதே நேரத்தில், நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் யூ டியூப் சேனல்களில் சாடி வந்தார். இப்படிப்பட்ட சூழலில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனையை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது. சவுக்கு சங்கரின் சிறை தண்டனையை உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
