சாணக்கியாவின் மூன்றாவது ஆண்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இதில், தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், எம்.ஆர். வீரப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உரையாற்றிய மதுரை ஆதீனத்தின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். இவர் பதவியேற்றுக் கொண்ட பின்பு, ஹிந்து மதம், பாரத தேசம், ஆன்மிகம், கோவில்கள் பற்றிய தனது மனதிலுள்ள எண்ணங்களை ஒளிவு மறைவின்றி அப்படியே பேசக் கூடியவர். குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்காமல், தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டபோது, முதன் முதலாக குரல் கொடுத்தவர் மதுரை ஆதீனம்தான்.
‘விநாயகர் சதுர்த்தி இன்று நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாப்பட்ட விழா. அதற்குத் தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தியை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும், மதுக்கடைகளால் மாணவர் சமுதாயம் பாழ்படுகிறது. ஆகவே, மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் தி.மு.க. அரசுக்கு மிகவும் துணிச்சலாக அறிவுரை வழங்கியவர். இப்படி தி.மு.க. அரசு செய்யும் தவறுகளையும், செய்யத் தவறிய விஷயங்களையும் சுட்டிக்காட்டி, தனது பணியை இன்று வரை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, பிரபல நெறியாளரான ரங்கராஜ் பாண்டேவின் இணையதள ஊடகமான சாணக்கியா தனது மூன்றாவது ஆண்டு விழாவினை நேற்றைய தினம் மிகச் சிறப்பாக கொண்டாடியது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மதுரை ஆதீனம், கூறியதாவது; ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் நபர்களையும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சரையும் மிக கடுமையாக சாடி இருந்தார். சென்னை ஆன்மீக பூமி இது திராவிட பூமி அல்ல என்று கூறி இருந்தார். இன்னும் இரண்டை மட்டும் தான் மக்களுக்கு, இலவசமாக கொடுக்கவில்லை, அது என்னவெனில் ஒன்று இலவச திருவோடு மற்றொன்று இலவச கோவணம் என்று பேசியது தான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

