மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின வாலிபர் மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்தது தொடர்பாக, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் படத்தை பதிவிட்ட தமிழகத்தின் தி.மு.க. பிரமுகர் மீது மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் குபாரி பஜாரில் பழங்குடியின வாலிபர் மீது, போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரவேஷ் சுக்லா என்கிற அந்த நபரை போலீஸார் கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும், அவரது வீட்டையும் மாநில அரசு புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. அதோடு, அந்த பழங்குடியின வாலிபரை தனது வீட்டிற்கு வரவழைத்து அவரது பாதங்களை கழுவிய மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், நடந்த சம்பவத்திற்கு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை வைத்து இந்திய தேசத்தை அவமதிக்கும் வகையில், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும், தி.மு.க.வினரும் கருத்துக்களையும், கருத்துச் சித்திரங்களையும் வெளிட்டு வந்தனர். அந்த வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த ஷபிக் என்பவர், இந்திய வரைபடத்தில் போர்த்தப்பட்டிருக்கும் தேசியக்கொடி மீது ஹிந்து ஒருவர் சிறுநீர் கழிப்பது போல படத்தை சித்தரித்து இதுதான் பாஜகவின் புதிய இந்தியா என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, மேற்கண்ட ஷபீக் என்கிற நபர் மீது மத்திய பிரதேச போலீஸார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.