ஹிந்துக்கள் பற்றி அவதூறு புத்தகம்: ஃபர்ஹத் கான் உட்பட 4 பேர் மீது வழக்கு!

ஹிந்துக்கள் பற்றி அவதூறு புத்தகம்: ஃபர்ஹத் கான் உட்பட 4 பேர் மீது வழக்கு!

Share it if you like it

ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் குறித்து அவதூறு கருத்துக்களைக் கூறி புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர் ஃபர்ஹத் கான் உட்பட 4 பேர் மீது மத்திய பிரதேச மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஃபர்ஹத் கான் என்கிற எழுத்தாளர் ‘கூட்டு வன்முறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு’ (Collective Violence and Criminal Justice System) என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இப்புத்தகத்தை அமர் லா பப்ளிகேஷன்ஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் ஹிந்துக்கள் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.), விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் போன்ற ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு எதிரான ஆட்சேபகரமான கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. இப்புத்தகம் கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) உறுப்பினர்கள், இந்தூரில் அமைந்திருக்கும் அரசு புதிய சட்டக் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஃபர்ஹத் கான், அமர் லா பப்ளிகேஷன்ஸ், கல்லூரியின் முதல்வர் இனாம் உர் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் மிர்சா மோஜிஸ் பெய்க் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். கானின் புத்தகத்தில் ஹிந்துத்துவ அமைப்புகளுக்கு எதிரான ஆட்சேபகரமான உள்ளடக்கம் இருப்பதோடு, ஹிந்து வகுப்புவாதம் ஒரு அழிவு சித்தாந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள் ஹிந்து பெரும்பான்மை அரசை நிறுவ முயல்வதாகவும், மற்ற சமூகங்களை அடிமைப்படுத்த விரும்புவதாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்றார்.


Share it if you like it