சமீபத்தில் பாஜகவை சேர்ந்த நிஷிகாந்த் துபே சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகார் கடிதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை அதானி தொடர்பான கேள்விகளைதான் எழுப்பியுள்ளார். இதற்காக அவர் மற்ற நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இப்புகாரை குறித்து, அக்டோபர் 26 ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியைப் பறிக்கும்படி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தனியிடம் பணம் வாங்கி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.அதில் பரிந்துரைத்தபடி மொய்த்ராவின் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.