உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை செய்து வருகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.
இதன் காரணமாக, மாற்று கட்சியினர் பலர், அம்மாநில பாஜக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவைரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திர பண்டாரி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
ராஜேந்திர பண்டாரி-க்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், கட்சியின் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இதன் பின்னர், கட்சியின் உறுப்பினர் என்பதற்கான சான்று அட்டையும் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய ராஜேந்திர பண்டாரி, பிரதமர் மோடி தலைமையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டை முன்னோக்கி வழிநடத்தி செல்வதற்காக அவர் பணியாற்றும் விதம் எனக்கு உந்துதலை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க.வின் கொள்கைகளில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.